‘அறிவு இருக்கா’ வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜீவா – கடைசில இவரையே கோபப்பட வச்சிட்டாங்களே

0
405
- Advertisement -

துணிக்கடை திறப்பு விழாவில் பத்திரிகையாளர்களுக்கும் ஜீவாவிற்கும் இடையே நடந்திருக்கும் வாக்குவாதம் குறித்து தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜீவா. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் படங்களில் பிசியாக கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தேனி மதுரை சாலையில் உள்ள தனியார் ஜவுளி கடை திறப்பு விழா ஒன்றிற்கு ஜீவா சென்றிருந்தார்.

-விளம்பரம்-

ஜவுளி கடையை திறந்துவிட்டு அங்குள்ள ரசிகர்களுடன் சேர்ந்து ஜீவா புகைப்படம் எடுத்திருந்தார். அதற்கு பின் பத்திரிக்கையாளர்கள், கேரளாவில் நடக்கும் பாலியல் புகார் தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை ஜீவாவிடம் கேட்டிருந்தார்கள். அதற்கு ஜீவா, எனக்கு அதைப் பற்றி தெரியாது. எல்லா துறைகளுமே இது போன்ற புகார்கள் இருக்கிறது. இதற்கு பதில் நான் சொல்லவில்லை என்று சொன்னவுடன், நீங்கள் நடிகர் தானே? என்று மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

ஜீவா சொன்ன பதில்:

உடனே ஜீவா, ஏற்கனவே நான் பதில் கொடுத்து விட்டேன். நல்ல நிகழ்விற்காக வந்திருக்கிறேன். அபசகுனமாக பேசாதீர்கள். நல்லதை மட்டும் பேசுங்கள், கேளுங்கள் என்று கேட்க, தொடர்ந்து அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் விடாமல் ஜீவாவிடம் பாலியல் புகார் தொடர்பான கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு கோபப்பட்ட ஜீவா, உனக்கு அறிவு இருக்கா? எந்த இடத்தில் எந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று தெரியாதா? என்று ஆவேசப்பட்டு பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி இருந்தது.

வாக்குவாதத்தில் ஜீவா-செய்தியாளர்கள்:

கடைசியில் ஜீவாவை அங்கிருந்தவர்கள் பத்திரமாக அனுப்பி வைத்தார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரமாக மலையாள திரையுலக பாலியல் புகார் சர்ச்சை தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

ஹேமா கமிட்டி அறிக்கை:

கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது. பின் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள். அதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் வெளியிடாமல் இருந்தது.

பிரபலங்கள் கருத்து:

பின் கடந்த 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், நிறைய பெண்கள் அட்ஜஸ்ட்மெண்ட் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. இது குறித்து கேரள சினிமாவில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement