நடிகர் ஜீவாவின் கார் விபத்தில் சிக்கி இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜீவா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் இன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகில் நடிகர் ஜீவாவின் கார் வந்து இருந்தது .
கெட்டவார்த்தையில் திட்டிய ஜீவா.. Accident ஆயிருக்கு.. வீடியோ எடுக்குற… சாலையில் செம டென்ஷனான ஜீவா!#Kallakurichi #ActorJeeva #Jeeva #CarAccident #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/zuwpAvj53Y
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) September 11, 2024
அப்போது அவருடைய கார் வந்த திசையில் இருசக்கர வாகனம் சாலையை கடப்பதற்காக குறுக்கே வந்திருந்தது. இதனால் ஜீவா தன்னுடைய கார் அந்த இருசக்கர வாகனம் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக காரை திருப்பி இருந்தார். அப்போது ஜீவா கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பின் மீது பயங்கரமாக மோதி இருக்கிறது. இந்த விபத்தினால் காரின் உடைய முன் பகுதி முழுவதுமே சேதமடைந்து இருக்கிறது.
ஜீவா கார் விபத்து:
அதோடு இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நடிகர் ஜீவா மற்றும் அவருடைய மனைவிக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பித்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், நடிகர் ஜீவா விபத்து நடந்த பதட்டத்தில் தன்னுடைய குடும்பத்திற்கு ஏதாவது ஆகி இருக்கிறதா? என்று பார்த்துக் கொண்டிருந்தார் .
கோபத்தில் கத்திய ஜீவா:
அப்போது அவரை சுற்றிய மக்கள் கூட்டம் கூடி வீடியோ எடுத்து பேசி இருந்தார்கள். இதனால் ஜீவா கெட்ட வார்த்தையில் திட்டி, ஆக்சிடென்ட் ஆகிருக்கு வீடியோ எடுக்கிற நேரமா இது? என்றெல்லாம் டென்ஷனாகி கத்தி இருந்தார். பின் வேறு ஒரு காரை வரவைத்து நடிகர் ஜீவா அவருடைய மனைவி உடன் சேலத்திற்கு சென்றார்கள். இந்த விபத்து தொடர்பாக சின்னசேலம் போலீசார் விபத்தில் சிக்கிய காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது .
செய்தியாளர்களிடம் வாக்குவாதம்:
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு நடந்த கடைதிறப்பு விழா ஒன்றில் ஜீவாவிடம் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு கோபமடைந்த ஜீவா, நல்ல நேரத்தில் நல்லதை மட்டும் பேசுங்கள். தேவையில்லாமல் எதற்கு பேசுகிறீர்கள்? அபசகுனமாக பேசாதீர்கள். என்று கேட்க, தொடர்ந்து அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் விடாமல் ஜீவாவிடம் பாலியல் புகார் தொடர்பான கேள்விகளை கேட்டிருந்தார்.
ஜீவா திரைப்பயணம்:
இதனால் கோபப்பட்ட ஜீவா, உனக்கு அறிவு இருக்கா? எந்த இடத்தில் எந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று தெரியாதா? என்று ஆவேசப்பட்டு பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி இருந்தது. கடைசியில் ஜீவாவை அங்கிருந்தவர்கள் பத்திரமாக அனுப்பி வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் படங்களில் பிசியாக கவனம் செலுத்தி வருகிறார்.