கொரோனா விழிப்புணர்வு : தனது பெயரை மாற்றியுள்ள ஜீவா.

0
2095
jeevacorona
- Advertisement -

உலகம் முழுவதும் யுத்தத்தை விட பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது இந்த கொரோனா வைரஸ். கொரோனா வைரஸினால் தற்போது உலகமே தம்பித்து போய் உள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தொடங்கிய இந்த கொரோனா தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

-விளம்பரம்-

இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதால் அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள்.

- Advertisement -

தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். இந்தியாவில் இதுவரை 10 பேர் இறந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பரவல் காரணத்தினால் படப்பிடிப்புகள் எல்லாம் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ஜீவா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்து கூறி உள்ளார். கொரோனாவிற்காக நடிகை ஜீவா ட்விட்டரில் தன்னுடைய பெயரை மாற்றி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, உள்ளே போ, பாதுகாப்பாக இருங்கள் என்று கூறி உள்ளார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் ஜீவா. இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். சமீபத்தில் ராஜு முருகன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஜிப்ஸி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனாவினால் அதிகம் பாதிப்படைந்தது இத்தாலி நாடு என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நோய்த்தொற்று உள்ளவர்களும், வெளிநாடு சென்று வந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisement