‘எந்த டாட்காம்யா நீ’ – எப்போதும் ஜாலியாக இருக்கும் ஜீவாவையே இப்படி கடுப்பேத்திட்டாங்களே பாஸ். வைரலாகும் வீடியோ.

0
607
Jeeva
- Advertisement -

செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கடுப்பாகி நடிகர் ஜீவா பொறுமையில் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜீவா. இவர் ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். பின்னர் தொடர்ந்து இவர் கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, ரௌத்திரம், நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். தனது முதல் படத்தில் ஒரு காதல் ஹீரோவாக நடித்த ஜீவா அதன் பின்னர் நடித்த “ராம், டிஷ்யூம்” போன்ற படங்களில் தனது அபார நடிப்பு திறமையை கட்டியிருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் சில படங்கள் இவருக்கு தோல்வியிலேயே முடிந்தது. சரியான கதை தேர்வு செய்யும் திறமை ஜீவாவிடம் குறைந்ததால் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் ஹிட் கொடுக்கவில்லை. அதனை அடுத்து அவர் கதையை தேர்வு செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார். பின் கடந்த 2021ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கபிர் கான் இயக்கத்தில் உருவாகி இருந்த படம் “83”. இந்த படம் முழுக்க முழுக்க இந்திய கிரிக்கெட் விளையாட்டை கொண்ட கதை.

- Advertisement -

ஜீவா திரைப்பயணம்:

இந்த பட்டத்தில் ஜீவா நடித்திருந்தார். இந்த படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கைப் பயணத்தையும், அவர் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆனதும், 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பையை வென்றதும் பற்றிய கதை. மேலும், இந்த கதையில் தமிழ் நாட்டு கிரிக்கெட் வீரர் கிரிஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் ஆக ஜீவா நடித்திருந்தார். ஆனால், இந்த படம் அவ்வளவு பெரிதாக பெற்றியடையவில்லை.

ஜீவா நடித்த படங்கள்:

இப்படத்தை தொடர்ந்து ஜீவா “காஃபி வித் காதல்” என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா ஷர்மா, dd, யோகிபாபு, ஆர்யா, வி ஷர்மா, கணேஷ் போன்ற பலர் நடித்திருந்தனர். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை. அதற்கு பிறகு ஜீவா அவர்கள் நித்தம் ஒரு வானம், வரலாறு முக்கியம் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

ஜீவா அளித்த பேட்டி:

தற்போது “கோல்மால்” என்ற படத்தில் ஜீவா நடித்து வருகிறார். இதனை அடுத்து பா விஜய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஜீவா நடிக்க வருகிறார். இப்படி தொடர்ந்து சில படங்களில் ஜீவா கமிட் ஆகிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி இருக்கிறது. இந்த நிலையில் ஜீவா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டிருந்தார்கள்.

கடுப்பான ஜீவா :

அதற்கு கடுப்பான ஜீவா, யார்யா நீ? எந்த பத்திரிக்கை? என்ன பெயர்? அடிக்கிற மாதிரி கேள்வி எல்லாம் கேட்கிற என்று பேசி இருக்கிறார்.இப்படி ஜீவா பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசும் அதிகாரத்தை யார் உங்களுக்கு கொடுத்தது. மரியாதையாக பேச கற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் ஜீவாவை விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement