காய்கறியில் பூச்சிகொல்லி, மதுவில் எத்தனால். கலாபவன் மணி மரணத்தில் 35 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்த சி.பி.ஐ.

0
71197
kalabavan-mani
- Advertisement -

தென்னிந்திய திரைப்பட நடிகர் கலாபவன் மணி இறப்பு குறித்து சிபிஐ விசாரணை தாக்கல் முடிவுகள் வந்து உள்ளது. நடிகர் கலாபவன் மணி அவர்கள் கடுமையான கல்லீரல் நோய் பாதிப்பால் தான் இறந்து உள்ளதாக சிபிஐ விசாரணை தெரிவித்து உள்ளது. இந்திய திரைப்பட நடிகர், பாடகர் கலாபவன் மணி. இவர் கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் மலையாள திரைப்படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். கலாபவன் மணி அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for kalabhavan mani rare photos

- Advertisement -

இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழி திரைப் படங்களில் அதிகமாக குணச்சித்திர மற்றும் வில்லனாக நடித்து உள்ளார். தமிழில் விக்ரம்மின் ஜெமினி, ஜெயம் ரவியின் மலை, விஜய்யின் புதிய கீதை உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானவர். அதுமட்டும் இல்லாமல் கலாபவன் மணி அவர்கள் நாட்டு புறப்பாடல்களை கூட பாடி உள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள பண்ணை வீட்டில் நடிகர் கலாபவன் மணி அவர்கள் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார்.

இதையும் பாருங்க : சின்ன வாத்தியார் கிடையாது. இணையத்தில் கசிந்த விஜய் 64 படத்தின் டைட்டில் இது தானா ? அட இந்த நடிகரே சொல்லிட்டாரே.

கலாபவன் மணி குடும்பத்தினர் அவரை உடனே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கலாபவன் மணி இறந்து போனார். இறக்கும்போது இவருக்கு 45 வயது தான் ஆனது. இதையடுத்து அவருடைய இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. பின்னர் கலாபவன் மணி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனைக்கு பின் அவர் உடலில் மெத்தில் மற்றும் எத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும், க்ளோரோபைரபோஸ் என்ற கிருமிநாசினி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Image result for kalabhavan mani rare photos

இதனால் இவருடைய மரணம் குறித்து பல குழப்பங்கள் ஏற்பட்டது. அதோடு கலாபவன் மணி அவர்கள் குடிப்பழக்கம் கொண்டவர். அதனால் அவரது மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருப்பார்களோ?? என்று கலாபவன் மணி குடும்பத்தினர் சந்தேகப்பட்டு வழக்கு தொடுத்தனர். இவருடைய இறப்பு குறித்து சிபிஐ விசாரிக்க கோரி கடந்த 2017ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர் கேரள உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதன்படி கடந்த இரண்டு வருட விசாரணைக்கு பின் கொச்சி நீதிமன்றத்தில் கலாபவன் மரணம் குறித்து முடிவு சொல்லப்பட்டது. அதில் அவர்கள் கூறியது, உண்மையிலேயே கலாபவன் மணி அவர்கள் கல்லீரல் பாதிப்பால் தான் மரணமடைந்தார் என்று தெளிவாக பரிசோதனையில் தெரிய வந்து உள்ளது.

Image result for kalabhavan mani rare photos

கலாபவன் மணி அவர்கள் நிறைய பச்சைக் காய்கறிகளை உண்ணும் பழக்கம் உடையவர். அதன் வழியாகத் தான் இவருடைய உடலில் க்ளோரோபைரபோஸ் பூச்சிக்கொல்லி மருந்து அவர் உடலில் கலந்து உள்ளது. அதோடு அவர் இறக்கும் போது அவரின் உடலில் நாலு மில்லிகிராம் அளவு எத்தனால் இருந்து உள்ளது. இவர் மதுவுடன் எத்தனாலையும் கலந்து குடிக்கும் பழக்கம் இருந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஏற்கனவே கல்லீரல் கெட்டுப் போய் இருந்ததால் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துச் சாப்பிட்டு வந்து உள்ளார். அதில் கஞ்சா சிறிதளவு சேர்க்கப்பட்டிருக்கலாம். அப்படி, அவரின் உடலில் கஞ்சா கலந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இப்படி பல்வேறு விதமாக இவர் சாப்பிடும் பொருள்கள் மூலமாகத் தான் இவருடைய உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளார் எனவும் விசாரணையில் கூறப்படுகிறது.

Advertisement