விருது விழாவில் திரிஷா பின்னால் அமர்ந்துகொண்டு சைட் அடித்துள்ள இளம் நடிகர் – திரிஷாவே பகிர்ந்த புகைப்படம். (அவருக்கு 27 திரிஷாக்கு 38)

0
19079
trisha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். பின் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், நடிகை திரிஷா அவர்கள் சமீப காலமாகவே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால், நயன்தாரா அளவிற்கு லீட் கதாபாத்திரங்கள் இவருக்கு கைகொடுக்கவில்லை. இருப்பினும் நயன்தாராவிற்கு இணையாக தமிழ் திரையுலகில் இன்றும் ஒரு அந்தஸ்துடன் இருந்து வருகிறார் திரிஷா.

இதையும் பாருங்க : பூந்தமல்லி பிக்பாஸ் செட்டில் 6 பேருக்கு கொரோனா – அதுவும் யாருக்கு தெரியுமா ?

- Advertisement -

சமீபத்தில் தான் நடிகை திரிஷா தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை திரிஷாவை பிரபல இளம் நடிகர் விருது விழாவில் சைட் அடித்துள்ளார். அது வேறு யாரும் இல்லை பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸ் தான். நடிகர் காளிதாஸ் மலையாளத்தில் பல்வேரு படங்களில் நடித்துள்ளார். அதே போல இவர் மீன் குழம்பும் மண் பானையும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதே போல பாவக்கதையில் ‘சத்தாரு’ என்ற கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு பலரின் பாராட்டை பெற்றது. சமீபத்தில் காளிதாஸ் , விருது விழாவில் திரிஷாவிற்கு பின்னர் அமர்ந்துகொண்டு அவரது அழகை ரசித்துக்கொண்டு இருப்பது போல ஒரு புகைப்படத்தை பகிர்ந்த ரசிகர் ஒருவர் ‘விருது விழாவில் திரிஷாவை சைட் அடிசீங்களா’ என்று கேட்டிருந்தார். அதற்கு காளிதாஸ், ‘ஹம், அது வந்து’ என்று அசட்டு தனமாக பதில் கூறியுள்ளார். இதனை திரிஷாவும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement