தேவர் மகனை போல கம்பு சுத்தி கலக்கிய கமல் – இன்னுமும் அந்த வித்தைய மறக்கல. வீடியோ இதோ.

0
669
kamal

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக உலக நாயகன் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மையத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று (மார்ச் 15)முதல்முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்த கமல்  ஜனநாயக கடமையினை கட்சி தலைவனாக செய்யும் அரிய வாய்ப்பினை தேர்தல் ஆணையம் கொடுத்து இருக்கின்றது. இது என் முதல் தேர்தல். என்னுடைய தேர்தல் வியூகம் நேர்மைதான், எங்களிடம் இருக்கும் இந்த நேர்மை மற்றவர்களிடம இருக்காது. எங்களின் திட்டத்தையும் செழுமையும் நம்பியே களமிறங்கி இருக்கின்றோம் என்று கூறி இருக்கிறார்.

இதையும் பாருங்க : அதுக்கு எனக்கு விருப்பமில்லை – பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் இருந்து விலகிய காரணம் குறித்து பேசிய ஐஸ்வர்யா (வைஷாலி தணிகா)

- Advertisement -

மேலும், 50 ஆண்டுகள் தமிழகத்தை சீரழித்துள்ளனர். அதனை சீரமைக்க 10 ஆண்டுகளாவது பிடிக்கும். தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு எடுத்து செல்வேன் என்று என் சிறிய வயதில் கூறியதை இப்போதுவரை செய்து கொண்டிருக்கிறேன். அப்படிதான், தமிழகத்தை உலகத்தரத்துக்கு எடுத்துசெல்வேன் என்று கூறுகிறேன். திருடவில்லை, கொள்ளையடிக்கவில்லை என்றால் முடியும். எனக்கு இப்போது 66 வயதாகிவிட்டது. வாய்ப்பு கொடுங்கள். நேரமில்லை என்றும் கூறியிருந்தார்.

இப்படி ஒரு நிலையில் கோயம்பத்தூர் பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்ட நடிகர் கமல், அங்கே மக்களை சந்தித்தார். மேலும், பஸ் பயணம் செய்த கமல், கோயம்பத்தூரில் உள்ள சின்னப்ப தேவர் ஹாலில் சென்று பார்வையிட்ட போது அங்கே தேவர் மகனில் வருவது போல சிலம்பம் சுற்றி அசத்தினார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.

-விளம்பரம்-
Advertisement