தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டராக திகழ்ந்தவர் கனல் கண்ணன். இவர் ஸ்டண்ட் மாஸ்டராக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் வந்து கனல் கண்ணன் அசத்தியிருக்கிறார். 1991 ஆம் ஆண்டு சரத்குமார் நடித்த சேரன் பாண்டியன் படத்தின் மூலம் தான் சண்டை பயிற்சி இயக்குனராக தமிழ் சினிமாவில் கனல் கண்ணன் அறிமுகமாகி இருந்தார்.

அதற்கு பின்பு இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் என பல நடிகர்களுடன் இவர் சண்டை பயிற்சியாளராக நடித்திருக்கிறார். கடைசியாக இவர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த குருதி பூக்கள் என்ற படத்தில் தான் பணியாற்றியிருந்தார். அதற்கு பின் இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லை. இதனால் ஊடக பக்கமே கனல் கண்ணன் இல்லாமல் இருந்தார்.
கனல் கண்ணன் குறித்த தகவல்:
இதை அடுத்து சமீப காலமாகவே கனல் கண்ணன் குறித்து சோசியல் மீடியாவில் ஏதாவது ஒரு சர்ச்சைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றது. இது ஒரு பக்கம் இருக்க கனல் கண்ணன் ஆன்மீகத்தில் இறங்கி இருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சென்னையில் சிவ சுடலைமாடன் கோவில் ஒன்றை கனல் கண்ணன் கட்டி இருக்கிறார். இது இந்த ஆலயத்திற்கு பிரபலங்கள் பலருமே வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
https://www.youtube.com/watch?v=MOIJazuGcF4
கனல் கண்ணன் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் கனல் கண்ணன், நான் திடீரென்று ஆன்மீகத்தில் இறங்கவில்லை. என்னுடைய அப்பா, தாத்தா, முன்னோர்கள் எல்லோருமே ஆன்மீகத்தில் இருந்தவர்கள்தான். கோயில்கள் கட்டி எல்லாம் வழிபட்டு இருக்கிறார்கள். சினிமாவில் பிஸியாக இருந்ததால் என்னால் வர முடியவில்லை. இருந்தாலும் தினமும் நடக்கும் பூஜைகளை எல்லாம் மொபைலின் மூலம்
பார்த்துக் கொள்வேன். விஜய் சார் இந்த கோயிலுக்கு வந்திருக்கிறார். அவர் அவர் மதம் சார்ந்தவர் கிடையாது. ரொம்ப நல்ல மனிதர்.

சிம்பு பற்றி சொன்னது:
அதேபோல் இந்த கோயிலை கட்டுவதற்கு முன்பு நான் சிம்பு சாரிடம் உதவி கேட்டிருந்தேன். அவர், நீ கோயில் கட்டப் போகிறாயா? எங்களைப் பிழிந்து எடுக்கிறாய். உனக்கு அந்த அளவுக்கு பொறுமை இருக்கிறதா? என்றெல்லாம் கிண்டல் செய்தார். பிறகு ஒரு நாள் என்னை சந்தித்து ஒரு கவரில் கட்டுப்பணத்தை கொடுத்தார். நான் அதை எண்ணி கூட பார்க்கவில்லை. உடனே அந்த பணத்தை எடுத்துக் கொண்டு கோயில் கட்டும் வேலையில் ஈடுபட்டேன். அந்த கவரில் 61 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. இதெல்லாம் சிவனுடைய அருள் தான் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.






