கார்த்தி, 10-ஆம் வகுப்பு மாணவனாக இருந்த போது எப்படி இருந்துள்ளார் பாருங்க – Unseen புகைப்படம்.

0
759
karthi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் மகன் கார்த்தி மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. 2007-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘பருத்தி வீரன்’. இது தான் கார்த்தி ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம். இந்த படத்தினை பிரபல இயக்குநர் அமீர் இயக்கியிருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக ப்ரியாமணி நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இவர் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன், பிரியாணி, மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், தேவ், கைதி, தம்பி என அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-

இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. அதனைத் தொடர்ந்து இவர் கொம்பன், மருது, தேவராட்டம், புலிகுத்தி பாண்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். பெரும்பாலும் இவர் இயக்கிய படங்கள் எல்லாம் கிராமத்து பாணியில் இருக்கும். அதே போல் விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி வருகிறது.

- Advertisement -

கார்த்தி நடிக்கும் விருமன் படம்:

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக புதுமுக நடிகை அதிதி சங்கர் நடிக்கிறார். இவர் வேற யாரும் இல்லைங்க, பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கார்த்தி பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து உள்ளார்.

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம்:

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி வருகிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா , அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, பிரபு, ரஹ்மான், ஜெயராம், மோகன் ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து இம்முறை ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குகிறார் மணிரத்தனம். மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி வருகிறது.

-விளம்பரம்-

கார்த்தி நடிக்கும் சர்தார் படம்:

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து கார்த்திக் தற்போது சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் திரில்லர், அதிரடி படமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார், லக்ஷ்மன் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மற்றும் ராஜீஷா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

கார்த்தியின் சிறுவயது புகைப்படம்:

இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சமீபத்தில் கார்த்தி அவர்கள் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது அந்த புகைப்படம் காண்பிக்கப்பட்டது. அப்போது கார்த்திக் கூறியது, இது நான் பத்தாவது படிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறியிருக்கிறார். தற்போது கார்த்தியின் இந்த சிறு வயது புகைப்படத்தை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement