ஹீரோவாவதற்கு முன்பாகவே சூர்யா படத்தில் தோன்றியுள்ள கார்த்தி. வைரலாகும் புகைப்படம்.

0
50706
- Advertisement -

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் கார்த்தி. இவர் முன்னணி நடிகர் சூர்யாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. 2007-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘பருத்தி வீரன்’. இது தான் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர் அமீர் இயக்கியிருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக ப்ரியாமணி நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து ‘ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகு ராஜா, பிரியாணி, மெட்ராஸ், கொம்பன், தோழா, காஷ்மோரா, காற்று வெளியிடை, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், தேவ், கைதி, தம்பி’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார் கார்த்தி.

- Advertisement -

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு திரையுலகிலும் கார்த்தி நடித்த படங்கள் டப் செய்து வெளியிடப்படுவது வழக்கம். அங்கும் அப்படங்கள் எல்லாம் வெற்றியடைந்து வருகிறது. ஆகையால், நடிகர் கார்த்திக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகர் சிவக்குமாரின் மகனான கார்த்தி, ‘பருத்தி வீரன்’ படத்துக்கு முன்பே ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

அதுவும் தனது அண்ணனும், நடிகருமான சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. அந்த படம் தான் ‘ஆய்த எழுத்து’. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இந்த படத்தினை இயக்கி இருந்தார். இதில் கதையின் முக்கிய வேடங்களில் சூர்யா, மாதவன், சித்தார்த் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் கார்த்தி மிக சிறிய ரோலில், கூட்டத்தோடு கூட்டமாக வலம் வந்திருப்பார்.

-விளம்பரம்-

தற்போது, சமூக வலைத்தளங்களில் கார்த்தி ‘ஆய்த எழுத்து’ படத்தில் வந்த காட்சியின் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ‘ஆய்த எழுத்து’ படத்துக்கும் கார்த்திக்கும் இன்னொரு தொடர்பும் இருக்கிறது. இந்த படத்தில் மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார் கார்த்தி. இப்போது மணிரத்னம் இயக்கி கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement