கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக இந்த பெயரை வைத்துள்ளோம். நடிகர் கார்த்தியின் அழகான பதிவு.

0
1642
karthi

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வரும் கார்த்தி மீண்டும் அப்பாவாகி இருக்கிறார் தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியும் அடக்கம். தமிழ் சினிமாவின் 80 காலகட்டம் துவங்கி இன்று வரை பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகுமார். இவரது மகன்களான சூர்யா, கார்த்தி இருவருமே இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர்களாக திகழ்ந்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். கார்த்தியின் மூத்த மகனான சூர்யா ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார். மேலும், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

Actor Karthi to becomes daddy again! - Karthi- Suriya- Ranjani- pregnant-  Umayal karthi- Rashmika Mandanna- Sultan | Thandoratimes.com |

அதே போல கார்த்தி நடிகர் கார்த்தி கடந்த 2011-ம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் பார்த்து நிச்சயித்த இந்தத் திருமணம் கோயம்புத்தூரில் நடந்தது. ரஞ்சனி கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர். இத்தம்பதியருக்கு 2013-ம் ஆண்டு இவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தனர். அவருடைய பெயர் உமையாள். இப்படி ஒரு நிலையில் கார்த்தியின் மனைவி இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருந்தார். அதனை நமது வலைதளத்தில் கூட தெரிவித்து இருந்தோம்.

இதையும் பாருங்க : அட, கொடுமையே எஸ் பி ஜனநாதன் வீட்டில் நேர்ந்த அடுத்த இழப்பு – சோகம் தாங்காமல் ஏற்பட்ட மாரடைப்பு.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகர் கார்த்தி மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்து இருந்தது. அதை தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி தெரிவித்து இருந்தார் கார்த்தி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நாங்கள் ஆண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டு நிற்கிறோம் இந்த நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நன்றி கூறிக் கொள்கிறேன் எங்களின் மகனுக்கு உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களையும் கேட்டுக்கொள்கிறேன் கடவுளுக்கு நன்றி. என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் தனது மகனுக்கு ‘கந்தன்’ என்று முருகப்பெருமானின் பெயரை வைத்துள்ளார் கார்த்தி. இது குறித்து தனது சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கார்த்தி, கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக “கந்தன்” என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும். அன்புடன்… அப்பா.என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement