17 படம் 17 இயக்குனர்..!தேவ் படத்தை தொடர்ந்து கார்த்தியின் அடுத்த இயக்குனர் இவர் தான்..!

0
285

நடிகர் கார்த்திக் ‘பருத்திவீரன்’ என்ற தனது முதல் படத்திலேயே ஒரு சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றவர். அதன் பின்னர் பல்வேறு ஹிட் மாற்று பிளாப் படங்களை கொடுத்திருக்கிறார் நடிகர் கார்த்திக்.

Karthi

இதுவரை 17 படங்களில் நடித்துள்ள கார்த்திக் 17 இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார். அதில் சில புதுமுகங்கள் கூட. ஒரு ஹிட் கொடுத்தால் தொடர்ந்து அந்த இயக்குனரை வைத்து படம் எடுக்கும் சில ஹீரோக்கள் மத்தியில் நடிகர் கார்த்திக் மட்டும் புதிய இயக்குனர்களுடன் மட்டுமே படம் எடுப்பது என்று உறுதியாக உள்ளார்.

தற்போது ரஜத் ரவி ஷங்கர் இயக்கி வரும் தேவ் என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படத்தையும் புதிய இயக்குனருக்கே கொடுக்கவிருக்கிறார் கார்த்தி.

தமிழில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடைந்த மாநகரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடிகர் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ட்ரீம் வாரீர் தயாரிக்கும் இந்த படத்திற்கு சி எஸ் சாம் இசையமைக்கவுள்ளார். தற்போது படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.