பொன்னியின் செல்வன் படத்தின் டீசரில் கார்த்தி கூறி இருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்தினம். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் சாதித்து காட்டி இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி இருக்கிறது. மேலும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் படம்:
இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார்கள். இப்படத்தின் இரண்டு பாகங்களும் 800 கோடி பட்ஜெட் செலவில் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும், சைடில் டெக்னிகல் ஆகவும் பணியாற்றி இருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது. இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
படத்தின் டீசர்:
அனைவரும் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. மேலும், டீசர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த டீசரை பாராட்டி தங்களுடைய கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த டீசர் விழாவில் படத்தில் நடித்துள்ள முன்னணி நாயகர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்திக் அவர்கள் படம் குறித்து கூறியிருந்தது, நம் பள்ளிப் பருவத்தில் வரலாறு பாடம் என்றாலே தூங்கி விடுவோம்.
விழாவில் கார்த்திக் பேசியது:
வரலாற்றின் மீது பெரிய அளவு ஆர்வம் இருக்காது. அப்படி விழித்திருக்கும் எஞ்சிய நேரத்தில் நாம் கேட்பதெல்லாம் அந்நியர் நம்மை அடிமைப்படுத்திய கதை தான். அதேபோல் இப்போது இருக்கும் காலகட்டத்தில் புத்தகம் படிப்பதற்கு யாருக்கும் நேரமில்லை 10 வினாடி வீடியோவை பார்த்து விட்டு நகர்ந்து விடுகிறோம். ஆனால், ஐந்து பகுதிகளைக் கொண்ட ஒரு புத்தகத்தை மணிசார் படமாக்கி இருக்கிறார். வரலாறு படிக்காமல் இதை படைக்க முடியாது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு வரலாறு படியுங்கள் என்று சொல்கிறேன். இப்படத்தை பார்க்கும் போது பெருமிதமாக இருக்கும். அப்படி பெருமிதம் வரும் போது இதை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இன்று அரசு கொண்டுவரும் பல நலத்திட்டங்கள் சோழர்கள் கொண்டுவந்தது தான்.
மணிரத்தினம் குறித்து சொன்னது:
பொண்ணியின் செல்வன் படம் மணி சார் நமக்கு அளித்த ஒரு மிகப்பெரிய பரிசு என்றுதான் சொல்லணும். நான் எனது அம்மாவிடம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளேன் என்று சொன்னேன். ஏன்னா, என்னுடைய கல்லூரியில் உள்ள பெண்கள் எல்லாம் வந்தியத்தேவனை போன்ற ஒருவரைத்தான் திருமணம் செய்ய ஆசைப் படுவார்கள் என்று கூறினார்கள். அவர் என்ன அவ்வளவு பெரிய லவ்வர் பாயா என்று கேட்டேன். அதன்பிறகு வரலாறு படிக்கும் நண்பனிடம் கேட்டேன். வந்தியதேவன் எப்படி புரிந்து கொள்வது என்று கேட்டபோது ஐஏஎஸ் அதிகாரிதான் என்று கூறினார்.
வந்தியத்தேவன் குறித்து சொன்னது:
அவர்களுக்கு தான் எல்லாம் தெரியும். அது போல குதிரை ஏற்றம் போன்ற எல்லா கலைகளையும் அறிந்திருக்க வேண்டும். வந்தியத்தேவன் ஒரு இளவரசன். ஆனால், அவனுக்கு நாடு கிடையாது. ஆனால், அவன் பேரரசை கொண்டவன். அவனுக்கு எல்லா ஆசைகளும் உண்டு. பெண்ணாசை முதல் பண ஆசை வரை எல்லா ஆசைகளும் உண்டு. மிகவும் நேர்மையானவன். இதுதான் எனக்கு வந்தியத்தேவனை புரிந்துகொள்ள உதவியாக இருந்தது. பொதுவாக ஒரு நாவலை படமாக்குவது சிக்கல் உள்ளது. ஏனென்றால், இந்த நாவலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். குறைந்தது 50 லட்சத்துக்கும் மேலான மக்கள் இந்த புத்தகத்தை படித்திருப்பார்கள். அனைவருக்கும் ஏற்றவாறு மணி சார் இந்த படத்தை அழகாக எடுத்து இருக்கிறார் என்று பல விஷயங்களை கூறி இருக்கிறார்.