முகம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்ட பிரபல நடிகர் ! மருத்துவமனையில் சிகிச்சை

0
923
Actor karthik
- Advertisement -

கன்னட நடிகர் கார்த்திக் விக்ரம் Nagavalli Vs Apthamithraru என்ற கன்னட படத்தில் மூலம் அறிமுக நடிகராக நடித்து வருகிறார் சமீபத்தில் இவர் அடையாளம்.தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது கன்னட சினிமா ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட செய்தி தொலைக்காட்சியில் வந்த தகவளின்படி கடந்த 13 செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணிக்கு கார்த்திக் புனேஸ்வர் நகரில் காரில் சென்றுக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 8 மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு அவரிடம் இருந்த பணம் ,செல் போன் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றுள்ளனர். இதனால் காயமடைந்த கார்த்திக் புனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

- Advertisement -

காது மற்றும் கழுத்தில் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்தி தற்போது நலமாக உள்ளார்.தகவல் அறிந்து புவனேஸ்வர் நகர காவல்துறை வழக்கு பதிவுசெய்து இது திருட்டா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதளா என்று விசாரணை நடத்திவருகிறது.

Advertisement