“எனக்கு நடந்தது அவருக்கும் நடந்துவிடக்கூடாது” – வலிமை வில்லனுக்காக அஜித் செய்த சிபாரிசு

0
580
- Advertisement -

ரசிகர்கள் அனைவரும் தல அஜித்தின் வலிமை படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் எதிர் நோக்கி காத்து கொண்டு இருக்கின்றனர். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். மேலும், வலிமைப் படத்தின் அப்டேட்டுகள் சோஷியல் மீடியாவில் வருவதால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ, ட்ரைலர் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த ஆண்டு பொங்கல் அன்று வலிமை படத்தை ரிலீஸ் செய்வதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தார்கள். ஆனால், சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது. பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை ரிலீசுக்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வலிமை படத்தின் வில்லன் கார்த்திகேயா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் அஜித் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

- Advertisement -

கார்த்திகேயா அளித்த பேட்டி:

ஒரு தெலுங்கு படம் பண்ணிட்டு இருக்கும் நேரத்தில் தான் எனக்கு வலிமை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. என்னால் நம்பவே முடியவில்லை உண்மையிலேயே என்னை தான் அஜித் சார் படத்தில் நடிக்க கூப்பிடுகிறார்களா! என்று சந்தேகத்தில் இருந்தேன். அதற்கு பிறகு தான் உண்மை என்று தெரிந்து சந்தோஷமாகஇருந்தது. வலிமைக்கு முன்னாடி வரைக்கும் நான் தமிழில் படம் பண்ணவில்லை. முதல் படமே அஜித் சார் கூட பண்ணுவது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மேலும், படத்தின் கடைசி நாள் ஷூட்டிங் போது இயக்குனர் என்னிடம் ஒரு விஷயத்தை சொன்னார். அதை கேட்கும்போது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

வலிமை படத்தில் கார்த்திகேயா நடிக்க காரணம்:

அது என்னவென்றால், வலிமை படத்திற்கு போட்டோ ஷூட் எடுத்து பார்த்த பிறகு என்னை வில்லனாக தமிழ் ரசிகர்கள் ஏற்பார்களா? என்று வினோத்துக்கு சின்ன சந்தேகம் இருந்திருக்கிறது. தெலுங்கில் இருந்தெல்லாம் வில்லன் எதற்கு? தமிழிலேயே ஏதாவது ஒரு நடிகரை நடிக்க வைக்கலாம் என்றெல்லாம் அஜித் சாரிடம் வினோத் கேட்டுள்ளார். அதற்கு அஜித் சார், இனி நாம் மாற்றினால் அது அவருடைய கேரியரை பாதிக்கும். என்னுடைய கேரியரில் தொடக்கத்திலும் இதுபோல் ஒரு முறை ஆகி இருக்கிறது. நான் கார்த்திக்கேயாவிடம் பேசியபோது அவர் மிகவும் அர்ப்பணிப்புடன் ஆர்வமாகவும் இருப்பது தெரிகிறது.

-விளம்பரம்-

அஜித் சமைத்த உணவு:

அதனால் அவரே இருக்கட்டும் என்று அஜித் சார் கூறி இருக்கிறார். என்னிடம் வினோத் சார் சொல்லிய போது எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவ்வளவு சந்தோசமாக இருந்தது. அதுமட்டும் இல்லாமல் முதல் படமே அஜித் சார் கூட என்று நினைத்து எனக்கு தூக்கமே வரவில்லை. அவரிடம் எப்படி பேசணும் என்றெல்லாம் பிராக்டீஸ் பண்ணேன். சொல்லப்போனால் எனக்கு தமிழ் சுத்தமாக பேசதெரியாது. அதனால் அஜித் சார் எப்பவும் இங்கிலீஷில் தான் என்கிட்ட பேசுவார். இப்ப வலிமை படத்தில் நடித்ததற்கு பிறகு கொஞ்சம் தமிழ் பேசுவேன். மேலும், அஜித் சார் எனக்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப் செஞ்சு கொடுப்பார். எந்த மாதிரி சூப் என்று கேட்டு செய்வார். படத்தோட கடைசி பைக் சீன் முடித்தவுடனே ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி பண்ணி கொடுத்தார்.

வலிமை படத்தின் பைக் ரேஸ்:

அஜித் அவர்கள் எப்போதுமே எல்லோரிடமும் சகஜமாக பேசுவார். ஒரு பிக் பிரதர் மாதிரி நடப்பார். என்கிட்ட மட்டும் இல்லை எல்லோரிடமும் அவர் இப்படி தான் நடந்து கொள்வார். எனக்கும் படத்தில் பைக் ரேசிங் இருக்கும். அஜித் சார் பைக் ரேசிங் எடுக்குறதுக்கு முன்னாடி என்னோட பைக்கை எடுத்து செக் பண்ணி பார்ப்பார். இன்ஜின், பிரேக் எல்லாம் சரியா இருக்கானு ஓட்டி பார்த்தார். படத்தில் பைக் ரேசிங் பண்ணியிருக்கேன். ஆனால், அஜித் சார் லெவலுக்கு பண்ண முடியவில்லை. வலிமை படம் பொருத்தவரைக்கும் ஆக்சன் சீக்வென்ஸ் ரொம்ப அதிகமாக இருக்கும். ஹாலிவுட் ஸ்டைலில் படம் இருக்கும் என்று கூறியிருந்தார்.

Advertisement