தந்தைக்கு கொரோனா எப்படி வந்தது. கருணாஸ் மகன் வெளியிட்ட அறிக்கை.

0
2434
karunas
- Advertisement -

நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் மின்னலைப் போல் பரவிக் கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை.சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-
View this post on Instagram

??

A post shared by Ken Karunaas (@ken_karunaas) on

சமீபத்தில்கூட பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.இப்படி ஒரு நிலையில் காமெடி நடிகரும் முக்குலத்தோர் புலிப்படைகட்சி தலைவரும், எம் எல் ஏவுமான கருணாஸிற்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகரின் கருணாஸின் மகனும், இளம் நடிகருமான கென் கருணாஸ் தனது தந்தையின் நிலை குறித்தும் தங்களது குடும்பத்தினர் குறித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அன்பிற்கினிய ஓர் அனைவருக்கும் வணக்கம் எனது தந்தைக்கு கொரோனா தோற்று வந்ததைத் தொடர்ந்து நீங்கள் நலம் விசாரித்தீர்கள். உங்கள் அன்பிற்கு நன்றி.எனது தந்தை கட்சித் தலைவராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் திருவாடானை சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதால் பல நல்ல செயல்பாடுகளுக்கு பங்களிப்பு செய்து கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். இந்த நிலையில் கொரோனா தோற்று எப்படி வந்தது என்பது நமக்கு தெரிய வாய்ப்பில்லை. தற்போது மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

Ken Karunas to play a crucial role in Asuran- Cinema express

அச்சம் என்பதற்கு இடமில்லை. எனது குடும்பத்தினரும் நலமுடன் இருக்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக என் தந்தையுடன் இருந்தவர்கள் தயவுகூர்ந்து தங்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று மருத்துவரிடம் சோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று நீங்கள் குடும்பத்தினருடன் நலமோடு இருக்க வேண்டும் என்பதே எங்கள் குடும்பத்தினரின் ஆவல். இன்றியமையாத தேவைகள் தொடர்பாக மட்டும் வெளியே செல்லுங்கள். வீட்டில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் உங்கள் நலமே எங்கள் நலம் என்று பதிவிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement