சில நாட்களுக்கு முன் நடைபெற்ற “சர்கார்” இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கடுமையாக திட்டித் தீர்த்தார்கள்.
விஜய் ரசிகர்களிடன் தொடர்ந்து ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் கடும் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் நடிகர் கருணாகரனுக்கு எதிராக ஹேஷ்டேக்கை உருவாக்கி தொடர்ச்சியாக திட்டி தீர்த்தனர். அத்தோடு நடிகர் கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை உருவாக்கினர்.
தொடர்ந்து விஜய் ரசிகர்களுக்கு நடிகர் கருணாகரனுக்கும் வாக்குவாதம் முற்றிப்போக ஒரு சில ரசிகர்கள் ட்விட்டர் மற்றும் தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்தாகவும், இதனால் நடிகர் கருணாகரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி புகார் அளிக்க சென்றார்.
ஆனால், காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வந்ததற்கான செல் போன் பதிவுகளை கேட்டதால் அதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டிருந்தார் நடிகர் கருணாகரன். எனவே, இன்று (அக்டோபர் 11) கருணாகரன் ஆதாரங்களை காவல் நிலையத்தில் சமர்பிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று இரவு முதல் கருணாகரனின் செல் போன் ஆப் செய்யப்பட்டுள்ளதால்.
Will be back in Madurai in two days ??
— Karunakaran (@actorkaruna) October 10, 2018
அதே போல அவரது வாட்ஸ்அப்பில் இருந்து கூட வெளியேறியுள்ளார்.என்னவென்று விசாரித்ததில் நடிகர் கருணாகரன் தற்போது மதுரைக்கு கிளம்பியுள்ளாதாகவும் அவர் திரும்பி வர இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று தெரியவந்துள்ளது. விஜய் ரசிகர்கள் தொடர்ந்து மிரட்டி வந்ததால் நடிகர் கருணாகரன் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.