விஜய் ரசிகர்களை பகைத்துக் கொண்ட கருணாகரனுக்கு நிகழ்த்த சோகம் !

0
293
KARUNAKARAN

கடந்த சில நாட்களாக விஜய் குறித்து சர்ச்சையான டீவீட்களை பதிவிட்டு விஜய் ரசிகர்களிடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகர் கருணாகரன் விஜய் ரசிகர்களின் கடும் கோபத்திற்கும் கண்டனத்திற்கும் ஆளானார். நடிகர் கருணாகரனுக்கு எதிராக ஹேஷ்டேக்கை உருவாக்கி விஜய் ரசிகர்கள் தொடர்ச்சியாக திட்டி தீர்த்தனர்.விஜய் ரசிகர்களின் மிரட்டல்களால் தற்போது ட்விட்டரில் இருந்தே வெளியேறியுள்ளார் நடிகர் கருணாகரன்.

karunakaran

விஜய் பற்றியும், விஜய் ரசிகர்களை பற்றியும் தொடர்ந்து தவறாக பேசி வந்ததால் விஜய் ரசிகர்களுக்கும், நடிகர் கருணாகரனுக்கும் ட்விட்டரில் வாக்குவாதம் முற்றிப்போக ஒரு சில ரசிகர்கள் ட்விட்டர் மற்றும் தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்தாகவும், இதனால் நடிகர் கருணாகரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி புகார் அளிக்க சென்றார்.

ஆனால், காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வந்ததற்கான செல் போன் பதிவுகளை கேட்டதால் அதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டிருந்தார் நடிகர் கருணாகரன். எனவே, நேற்று (அக்டோபர் 11) கருணாகரன் ஆதாரங்களை காவல் நிலையத்தில் சமர்பிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி இரவு முதல் கருணாகரனின் செல் போன் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதே போலஅவரது வாட்ஸ்அப்பில் இருந்து கூட வெளியேறியிருந்தார் கருணாகரன்.

Actor karunakaran

இந்நிலையில் நேற்று முதல் நடிகர் கருணாகனிடம் இருந்து ட்விட்டரிலும் எந்த ஒரு ட்வீட்டும் காணப்படவில்லை என்ன வென்று விசாரித்ததில் நடிகர் கருணாகரனின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. உண்மையில் விஜய் ரசிகர்களின் கொடைச்சலால் ட்விட்டர் கணக்கை கருணாகரனே மடுங்கி கொண்டாரா,இல்லை ரசிகர்கள் ட்விட்டருக்கு ரிப்போர்ட் செய்ததால் அவரது கணக்கு முடக்கபட்டதா என்பது தெரியவில்லை. ட்விட்டர், முகநூல் போன்ற வலைத்தளங்களை பொறுத்த வரை ஒரு கணக்கை பல பயன்பாட்டாளர்கள் ரிப்போர்ட் செய்தால் அந்த கணக்கு முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.