சிவகங்கை மாவட்ட மக்களே, உஷாரா இருங்க – கருணாஸ் விடுத்த எச்சரிக்கை. என்ன காரணம் ?

0
380
karunas
- Advertisement -

சிவகங்கை மாவட்ட மக்களே உஷாராக இருங்கள் என்று கருணாஸ் கொடுத்திருக்கும் எச்சரிக்கை தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்பவர் கருணாஸ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இசை அமைப்பாளரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் அரசியல்வாதியும் ஆவார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ’நந்தா’ என்ற படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

-விளம்பரம்-

இந்த ஒரு படத்திலேயே இவர் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். அதன் பின்னர் கருணாஸ் அவர்கள் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறனை காண்பித்து இருக்கிறார். பின் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சாந்தமாமா, ரகளபுரம் ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்து தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தார் கருணாஸ். அதுமட்டும் இல்லாமல் இவர் படங்களில் பாடியும் இருக்கிறார். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

கருணாஸ் திரைப்பயணம்:

அதே போல இவர் அரசியலில் அதிக ஈடுபட்டு காட்டி இருந்தார். ஆனால், சமீப காலமாக கருணாஸ் அரசியலுக்கு போவதில்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இறுதியாக இவர் சூரரை போற்று, சங்கத்தலைவன் போன்ற படங்களில் நடித்து இருந்தார். தற்போது பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கருணாஸ் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார். கருணாஸ் நடித்த ஆதார் படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இயக்குனர் ராம்நாத் பழனிக்குமார் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் அருண் பாண்டியன், ரித்விகா, இனியா, திலீப் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

கருணாஸ் நடிக்கும் படம்:

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது கருணாஸ் அவர்கள் சசிகுமாருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் சல்லியர்கள் என்ற படத்தையும் கருணாஸ் தயாரித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கருணாஸ் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவரிடம் சிவகங்கை ஏரியாவில் இருக்கும் தோட்டம் குறித்து கேள்வி கேட்டதற்கு கருணாஸ் கூறியிருந்தது, எனக்கு இயற்கை விவசாயத்தில் அதிக ஆர்வம். அதற்காக ரொம்பவும் குறைவான காசுக்கு சில ஏக்கர் நிலத்தை வாங்கி போட்டேன்.

-விளம்பரம்-

கருணாஸ் அளித்த பேட்டி:

ஒரு ஏக்கர் இரண்டரை லட்சத்துக்குள் இருக்கும். நான் அந்த இடங்களை வாங்கி ஆறு வருடம் ஆகிவிட்டது. கரடு முரடான அந்த நிலத்தை செலவு செய்து செம்மைப்படுத்தி இருக்கிறேன். கொரோனா சமயத்தில் தான் அதை நான் உருவாக்கினேன். மொத்தமே 14 ஏக்கர் 40 லட்ச ரூபாய்க்கு கிட்ட வரும். நான் நிலத்தை வாங்கியதை தொடர்ந்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கிறது. இவர் ஃபாரஸ்ட் இடங்களை தான் தில்லுமுல்லு பண்ணி வாங்கி இருக்கிறார் என்றெல்லாம் கிளப்பி விட்டார்கள்.

கருணாஸ் வாங்கிய நிலம்:

என்ன புதி ஏன் இப்படி செய்கிறார்கள்? என்றும் புரியவில்லை. அந்த இடத்தை சொல்லி நிறைய பேர் விலையை ஏற்றி விற்கிறார்கள். அந்த ஏரியாவில் நிலத்தை விற்பவர்கள் கருணாஸ் தோட்டம் அருகில் தான் நிலம் இருக்கிறது என்று என்னுடைய பெயரை சொல்லி விளம்பரம் பண்றார்கள். அது ஒரு வறண்ட பூமி. கருங்கல்லாக கிடைக்கிற ஒரு பூமி. குறிப்பாக சிவகங்கை மாவட்டம் மக்களே! இதை நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். அப்படி ஒரு பூமியில் ஒரு லட்சம் லட்சமாக போட்டு அதை பயன்படுத்தி பயிர் வைத்தேன். மாதத்திற்கு எனக்கு 50000 செலவாகுது.

நிலம் குறித்த உண்மையை சொன்ன கருணாஸ்:

ஒரு சராசரி விவசாயினால் இதை சமாளிக்க முடியாது. அந்த மண்ணிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் கூட சம்பாதிக்க முடியாது. அதுதான் உண்மையான நிலை. என் அனுமதி கூட இல்லாமல் ஒன்றுமே இல்லாத இடத்தை லட்ச லட்சமாக விலையை ஏற்றி வியாபாரம் செய்து விற்கிறார்கள். என்னுடைய பெயர் சொல்லி விற்பதனால் பலரும் இதை நம்பி வாங்குகிறார்கள். அவ்வளவு காசுக்கு அந்த இடம் தகுதியே இல்லை. அந்த இடத்தில் போர் போடணும், கிணறு வெட்டணும், தண்ணீர் பாய்ச்சனும் நின்று நிறைய வேலைகள் இருக்கிறது உஷாராக இருந்து வாங்குங்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement