உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ள கருணாஸ் மகள் – வேற லெவல் Transformation. இதோ புகைப்படம்.

0
3788
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்பவர் கருணாஸ். இவர் தமிழ் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இசை அமைப்பாளரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழக அரசியல் வாதியும் ஆவர். சூர்யா நடிப்பில் வெளிவந்த ’நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகிற்கு அறிமுகமானர். இந்த ஒரு படத்திலேயே இவர் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். பின்னர் கருணாஸ் அவர்கள் வில்லன், புதிய கீதை, திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறனை காண்பித்து உள்ளார். பின் ‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘சாந்தமாமா’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தார் கருணாஸ்.

-விளம்பரம்-
உடல் எடை குறைப்பதற்கு முன் டயானா

இறுதியாக 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ரகளபுரம் படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். அதற்கு பின் இவர் ஹீரோவாக நடிக்கவில்லை. தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதே போல இவர் அரசியலில் அதிக ஈடுபட்டு காட்டி வருகிறார். மேலும், கடந்த 5 வருடங்களில் கருணாஸ் அதிகமாகப் படங்களில் நடிக்காமல் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இருப்பினும் ஒரு சில படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வந்தார்.

- Advertisement -

கருணாஸ் நடித்த படங்கள்:

இறுதியாக இவர் சூரரை போற்று, சங்கத்தலைவன் போன்ற படங்களில் நடித்து இருந்தார். தற்போது பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கருணாஸ் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார். இந்தப் படத்தை கருணாஸ் ஹீரோவாக நடித்த ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.ராம்நாத் தான் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக பிக் பாஸ் 2 டைட்டில் வின்னர் ரித்விகா நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ‘ஆதார்’ என்று பெயர் வைத்துள்ளனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜைகள் கூட நடைபெற்று உள்ளது. படத்திற்கான வேலைகள் எல்லாம் சென்று கொண்டு இருக்கிறது.

பாடகி கிரேஸ்ஸின் திரை பயணம்:

இதனிடையே கருணாஸ் அவர்கள் பாடகி கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிரேஸ் அவர்கள் சினிமாவில் பல படங்களில் பாடி உள்ளார். இவர் அதிகம் தன் கணவன் நடித்த படங்களில் பாடி இருக்கிறார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிந்த கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். இவர் பாடிய கிறிஸ்தவ பக்தி பாடல்கள், கிராமிய பாடல்கள் அனைத்தும் பிரபலமானவை. தற்போது கிரேஸ் அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கிரேஸ் அருமையாக விளையாடி வருகிறார்.

-விளம்பரம்-

கருணாஸ் –கிரேஸ் குடும்பம்:

மேலும், நடிகர் கருணாஸ் –கிரேஸ் ஆகிய தம்பதியினருக்கு ஒரு மகள், மகன் உள்ளார்கள். மகன் பெயர் கென். இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான அழகு குட்டி செல்லம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது தனுஷ் அவர்களின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘அசுரன்’ படத்தில் தான். அதுமட்டும் இல்லாமல் கருணாஸின் மகன் கென் நடிப்பை பார்த்து பல பேர் பாராட்டினார்கள். தற்போது கென் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் கருணாஸ் மகளின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் கருணாஸ் மகன் கென்னை பற்றி பலருக்கும் தெரியும்.

வைரலாகும் கருணாஸ் மகளின் புகைப்படம்:

ஆனால், அவருடைய மகள் பற்றி யாருக்கும் தெரியாது. கருணாஸ் மகள் பெயர் டயானா. தற்போது சோசியல் மீடியாவில் கருணாஸ் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கருணாஸ் தன் மனைவி, மகன், மகளுடன் இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? அதுவும் இவ்வளவு அழகாகவா! என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கருணாஸின் குடும்ப புகைப்படத்தை சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement