இந்தியாவில் இல்லாத ஒரு சாப்பாடு இருக்குன்னா அது எங்க ஹோட்டல்ல தான் – கிரேஸ் கருணாஸ் ( அப்படி என்ன சாப்பாடு பாருங்க )

0
2573
karunas
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்பவர் கருணாஸ். இவர் நடிகர் மட்டுமில்லாமல் இசை அமைப்பாளர், அரசியல்வாதியும் ஆவார். நந்தா என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து இருக்கிறார். மேலும், இவருடைய மனைவி கிரேஸ். இவர் பின்னணி பாடகர் ஆவார். இந்நிலையில் நடிகர் கருணாஸ் மனைவி கிரேஸ் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் தாங்கள் நடத்தும் ரத்தன விலாஸ் ஹோட்டல் குறித்து பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதில் அவர் கூறியிருப்பது, ஹோட்டல் நடத்தலாம் என்று எங்களை விட கருணாவுக்கு தான் அதிக ஆசை. முதலில் நாங்கள் வடபழனியில் லொடுக்கு பாண்டி என்ற ஹோட்டல் நடத்தினோம். அதற்கு பிறகு ஸ்ரீபெரும்புதூரில் கருரில் திண்டுக்கல் சாரதி என்ற ஹோட்டல் நடத்தி வந்தோம். அதற்குப் பிறகு கருணாஸ் ரத்ன விலாஸ் ஹோட்டல் நடத்தி வருகிறோம். கருணா உடைய அப்பா ஆரம்பத்தில் சின்னதாக ஒரு ஓட்டல் நடத்தி வந்தார். அதே போல் கருணாவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே சினிமாவிற்கு அடுத்து இன்னொரு தொழில் என்றால் ஹோட்டல் தான் இருக்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை.

இதையும் பாருங்க : கூட்டத்த பாத்ததும் தெரியாம பேசிட்டேன், என்ன மன்னிச்சிடுங்க – அஸ்வின் வெளியிட்ட முதல் வீடியோ விளக்கம்.

- Advertisement -

எனக்கும் குக்கிங்கில் ரொம்ப ஆசை. அதனால் நாங்கள் இரண்டு பேருமே ஹோட்டல் ஆரம்பிக்கலாம் என்று விரும்பி ஆசைப்பட்டுத்தான் தொடங்கினோம். அதே போல் மத்த ஹோட்டலுக்கும் எங்களுடைய ஹோட்டலுக்கும் வித்தியாசம் என்றால் பார்த்தால் பாரம்பரிய உணவு. பாரம்பரிய உணவு நிறைய ஓட்டலில் இருந்தாலும் எங்களுடைய ஸ்பெஷல் என்றால், தூய்மையான எண்ணெய் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெயில் சமைப்போம். எல்லாமே செக்கில் ஆட்டிய எண்ணெய். அதே மாதிரி மசாலாவும் நாங்களே தயாரித்து தான் பயன்படுத்துவோம்.

மேலும், எங்களுடைய மெனுவில் உள்ள சில டிஸ் தமிழ்நாட்டில் இல்லை, சொல்லப்போனால் இந்தியாவிலேயே இல்லை என்று அடிச்சு, தைரியமா சொல்லுவேன். எங்களுடைய மெனுவில் ஸ்பெஷல் என்றால், பனை ஓலை கறிசோறு. பனை ஓலை உள்ளே ரைஸ், மட்டன் வைத்து சமைப்பது. அந்த அளவிற்கு தூய்மையான சுத்தமான உணவு எங்க ஒட்டலில் இருக்கும். அதுதான் வித்தியாசம் என்று சொல்லுவேன். மேலும், நம் நாட்டில் ஆரோக்கியமற்ற உணவு போய்க்கொண்டிருக்கிறது. அதற்காகத்தான் நாங்கள் ஒரு ஆரோக்கியமான உணவை முடிந்த அளவிற்கு ரத்தன விலாஸ் ஹோட்டல் மூலம் வழங்கி வருகிறோம். உணவே மருந்து தான் எங்கள் கான்செப்ட் என்று கூறியிருந்தார். இப்படி அவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement