விமான நிலையத்திற்கு நடிகர் கருணாஸ் கொண்டு வந்த கைப்பையில் துப்பாக்கி குண்டுகள் இருந்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கருணாஸ். இவர் இன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் செல்ல இருந்ததால் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார்.
பின் அவரிடம் வழக்கமான சோதனைகள் நடத்தி இருக்கிறார்கள். அப்போது கருணாஸ் கொண்டுவந்த கைப்பையில் சுமார் 40 துப்பாக்கி குண்டுகள் இருந்ததை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை பார்த்து விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். இதை அடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதோடு கருணாஸ் விமானத்தில் செல்ல அனுமதி வழங்கவில்லை. மேலும், சென்னையிலிருந்து திருச்சி செல்ல இருந்த விமானமும் சுமார் 30 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
கருணாஸ் இடம் விசாரணை:
பின் விமான நிலை அதிகாரிகள் கருணாஸ் இடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அதில் கருணாஸ், நான் வைத்து இருக்கும் துப்பாகிக்கு லைசன்ஸ் இருக்கிறது. அதனுடைய தோட்டாக்கள் தான் இது. அதோட விமான நிலையத்திற்குள் தோட்டாக்களை கொண்டு வரக்கூடாது என்று எனக்கு தெரியும். மறந்து அதை எடுத்து வந்து விட்டேன் என்று கூறி அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்து இருக்கிறார். அதை தொடர்ந்து கருணாஸ் பயணம் ரத்து செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.
கருணாஸ் குறித்த தகவல்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்பவர் கருணாஸ். இவர் தமிழ் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இசை அமைப்பாளரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் அரசியல்வாதியும் ஆவர். சூர்யா நடிப்பில் வெளிவந்த ’நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகிற்கு அறிமுகமானர். இந்த ஒரு படத்திலேயே இவர் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார்.
கருணாஸ் திரைப்பயணம்:
பின்னர் கருணாஸ் அவர்கள் வில்லன், புதிய கீதை, திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறனை காண்பித்து இருந்தார். பின் ‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘சாந்தமாமா’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தார் கருணாஸ். இறுதியாக 2013 ஒரு ஆண்டு வெளிவந்த ரகளபுரம் படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். அதற்கு பின் இவர் ஹீரோவாக நடிக்கவில்லை
கருணாஸ் அரசியல்:
. தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதே போல இவர் அரசியலில் அதிக ஈடுபட்டு காட்டி வருகிறார். இவர் முதலில் அதிமுக கட்சியில் இணைந்திருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு இருந்தார். தற்போது இவர் முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.