குமரிமுத்துவ நான் தான் படிக்க வச்சேன், ஆனா நல்லா வந்த காலத்துல உதவல – குமரி முத்து அண்ணனின் பரிதாப நிலை.

0
998
kumarimuthu
- Advertisement -

குமரி முத்துவின் அண்ணனுக்கு ஆர்.எஸ்.எஸ் வீடுகட்டிக் கொடுத்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் குமரிமுத்து. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 30 ஆண்டு காலமாக திரை உலகில் பயணித்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் பெரும்பாலும் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார். அதிலும் இவருடைய சிரிப்பை யாரும் சீக்கிரம் மறந்துவிட முடியாது.

-விளம்பரம்-

இவர் நடிகர் மட்டுமல்லாது திமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்திருந்தார். பின் 2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் குமரிமுத்து சென்னையில் காலமானார். இந்நிலையில் குமரிமுத்துவின் அண்ணாவிற்கு ஆர்எஸ்எஸ் வீடு கட்டி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. குமரிமுத்துவின் அண்ணாவின் பெயர் நீலகண்டன். இவரும் குமரி மாவட்டம் பெருங்குளம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். இவருடைய மனைவி சுசீலா. இவர் தன்னுடைய மனைவியுடன் வறுமை சூழலில் வசித்து வருகிறார்.

- Advertisement -

குமரிமுத்து அண்ணனுக்கு வீடு கட்டி கொடுத்தது:

மேலும், இவர்களின் வறுமையை பார்த்து இரக்கப்பட்ட அந்த பகுதியை சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அவர்களுக்கு தங்கள் சொந்த செலவில் சின்னதாய் வீடு ஒன்றை சமீபத்தில் கட்டிக் கொடுத்துள்ளனர். இதற்கு முன்பு இவர்கள் இருவரும் கூரை வீட்டில் வசித்து வந்தார்கள். தற்போது இவர்கள் கான்கிரீட் வீட்டுக்கு மாறி இருக்கிறார்கள். 75 வயதை கடந்த இந்த தம்பதிகளுக்கு போதுமானதாக இருக்க கூடிய சின்ன சிறிய வீடு ஒன்றை கட்டி தந்துள்ளார்கள். இந்நிலையில் இது குறித்து குமரிமுத்துவின் அண்ணன் நீலகண்டன் கூறியிருப்பது, சின்ன வயதில் மர அறுவை வேலை செய்தேன். மெட்ராஸ் வரைக்கும் போய் வேலை பார்த்திருக்கிறேன். எனக்கு பதினைந்து வருடத்திற்கு முன்பே கண்ணில் பார்வை மங்கிவிட்டது.

குமரிமுத்து குடும்பம்:

அதற்குப் பின்னால் வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போனது. என்னோட முதல் மனைவியும் குழந்தையும் சின்ன வயதிலேயே இறந்து விட்டார்கள். அதற்குப் பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். என் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 13 பேர். அதில் 8 பேர் ஆண், 5 பேர் பெண். எட்டு ஆண்களில் குமரிமுத்து தான் கடைக்குட்டி. இதே ஊரில் பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு பக்கத்தில் சின்ன நிலம் எனக்கு இருந்தது. அதுல தான் குடிசை போட்டு இருந்தேன். மழைக்கு எல்லாம் கிழிந்து போய் விட்டது. புதிதாக கூரை வாங்க கூட வழியில்லாமல் இருந்த போது தான் இந்த பகுதியை சேர்ந்த தேவதாஸ் என்பவர் தான் எங்களுடைய நிலைமையை பார்த்து விட்டு ஆர்எஸ்எஸ் தம்பிகளுக்கு தகவல் கொடுத்தார்.

-விளம்பரம்-

நீலகண்டன் அளித்த பேட்டி:

அவர்கள் மூலம் தான் எங்களுக்கு இந்த வீடு கிடைத்திருக்கிறது. கூரையை மட்டும் மாற்றிக் கொடுங்கள் என்று நாங்கள் சொன்னோம். ஆனால், அவங்க வீடு கட்டிக் கொடுத்து விட்டார்கள். கடைசியாக தேர்தல் பிரச்சாரத்திற்காக குமரி வட்டம் வந்தபோது குமரிமுத்து எங்களை சந்தித்து எங்களுடைய சூழலை பார்த்து அடுத்த வாரம் உங்கள் கஷ்டங்களையெல்லாம் தீர்க்கிறேன் என்று சொல்லி இருந்தார். ஆனால், திரும்பி வரவே இல்லை காலமாகி வந்தார். குமரிமுத்துவை சினிமாவிற்கு அனுப்பி வைத்ததே நான் தான். மெட்ராஸ் சூளைமேடு பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அம்மாவுக்கு பணம் அனுப்புவேன். அதிலிருந்து என்னுடைய அட்ரஸ் எடுத்துக்கொண்டு மெட்ராசுக்கு வந்துவிட்டார் குமரிமுத்து.

குமரிமுத்து குறித்து கூறியது:

அந்த சமயத்தில் சில பேர் சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் எனக்கு பழக்கம். அவர்கள் மூலம்தான் குமரிமுத்துக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் பிசியான பின்னாடி ஊர் நல்லது கெட்டதுக்கு மட்டும் குமரிமுத்து வருவார். அப்போது என்னையும் வந்து பார்ப்பார். கை செலவுக்கு ஏதாவது பணம் கொடுப்பார். அதுவும் பெரிய தொகையாக இருக்காது. குமரிமுத்துவை நான்தான் படிக்க வைத்தேன். ஆனாலும், அவர் நல்லா வந்த காலத்தில் எங்களுக்கு கை தூக்கி விட வில்லை என்ற ஆதங்கம் எனக்கு இன்னமும் இருக்கிறது. எங்களுக்கு நிரந்தர முகவரி இல்லாததால் வீட்டிற்கு கதவு இன்னும் இல்லை, எங்களுக்கு குடும்ப அட்டையும் இல்லை.

ஆர்எஸ்எஸ் இயக்கம் கூறியது:

அக்கம்பக்கத்தினர் தாங்கள் வாங்கும் ரேஷன் அரிசி இரண்டு கிலோ வீதம் எங்களுக்கு கொடுக்கிறார்கள். குடும்ப அட்டை இல்லாததால் முதியோர் பணம் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த தோழர்கள் கூறியிருப்பது, இவர்களுக்கு உதவி செய்த நாங்கள் முன்வைத்த போதும் அதை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இவர்கள் இல்லை. பிறகுதான் வீடு கட்டிக்கொள்ள சம்மதித்தார்கள். வறுமையில் வாழ்ந்தாலும் நேர்மையுடன் வாழ நினைக்கும் இவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தது எங்கள் இயக்கத்துக்கு பெருமகிழ்ச்சி. இதேபோல் இவர்களுக்கு முதியோர் பென்சன் கிடைக்க அரசு உதவி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.

Advertisement