தன்னைக் குறித்த வதந்திகளுக்கு மாதவன் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ என்ற படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இடையில் கொஞ்சம் மாதவன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் சமீப காலமாக மாதவன் நடித்த விக்ரம் வேதா, இறுதி சுற்று, மாறா போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
மாதவன் திரைப்பயணம்:
இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் சோசியல் மீடியாவில் மாதவன், இளம் பெண்களுடன் காதல் உரையாடுகிறார், தேவையில்லாத மெசேஜ்களை அனுப்புகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்திருந்தது. இது தொடர்பாக சிலர் மாதவனை விமர்சித்தும் திட்டியும் இருந்தார்கள். இந்நிலையில் இது குறித்து மாதவன் அளித்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சென்னையில் சில வாரங்களுக்கு முன் parent geenee inc என்ற செயலினுடைய அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று இருந்தது. இதில் மாதவன் கலந்து இருந்தார். அதோடு அவர் முதலீட்டராகவும் மூலோபாய கூட்டாளியாகவும் இணைந்து இருக்கிறார் .

நிகழ்ச்சியில் மாதவன்:
இந்த செயலி பெற்றோர் கட்டுப்பாட்டில் பிள்ளைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்பட்டது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய மாதவன், இந்த செயலி மூலம் குழந்தைகள் எப்போது சோசியல் மீடியாவை பயன்படுத்தினாலும் பெற்றோர்களால் தெரிந்து கொள்ள முடியும். இது மிகவும் பயனுள்ளது. தற்போது இருக்கும் காலகட்டத்தில் இந்த செயலி இருப்பது ரொம்பவே நல்லது. காரணம் என்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயத்தை வைத்துதான் சொல்கிறேன். நான் ஒரு நடிகர். அதனால் சோசியல் மீடியாவில் எனக்கு மக்கள் மூலம் இருந்து செய்திகள் வரும். அப்படி ஒரு இளம் பெண் எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தார்.
https://www.youtube.com/watch?v=z5r3yK5bVQw
மாதவன் பற்றிய சர்ச்சை:
அதில் அவர், நான் உங்கள் படத்தை பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நீங்கள் ஒரு அற்புதமான நடிகர். நீங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்கள் என்றெல்லாம் சொல்லி கடைசியில் இதயம் மற்றும் முத்த ஈமோஜிகளை எனக்கு அனுப்பி இருந்தார். ஒரு ரசிகை எனக்காக பாராட்டி அனுப்பியதற்கு நான் பதில் அளிக்கும் வகையில், எப்போதும் என்னை ஊக்குவிக்க இருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி. அது ரொம்ப அன்பானது. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்றுதான் பதிலளித்திருந்தேன். ஆனால், அந்தப் பெண், நான் அவளுக்கு அளித்த பதிலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவாக போட்டிருக்கிறார்.
மாதவன் பதிலடி:
அதை பார்த்த மக்கள், இதயம் மற்றும் முத்த இமோஜிக்கு பின்னால் உள்ள என்னுடைய மெசேஜை தான் பார்க்கிறார்கள். நான் இமோஜிக்கு பதில் அளிக்கவில்லை. அந்தப் பெண் என்னை பாராட்டியதற்கு தான் பதில் அளித்தேன். ஆனால், அந்த செய்தி தவறாக போய்விட்டது. அதைப் பார்த்து சிலர், மேடி இளம் பெண்களுடன் தவறாக பேசுகிறார் என்றெல்லாம் மோசமாக சோசியல் மீடியாவில் என்னைப் பற்றி போட்டு இருக்கிறார்கள். இதனாலே எனக்கு ஒவ்வொரு முறையும் மெசேஜ் அனுப்பும்போது அடுத்து என்ன நடக்குமோ? என்ன பிரச்சனை வருமோ? என்ற பயமிருக்கு என்று கூறியிருக்கிறார்






