-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

‘சினிமாவிற்கு அரசு வேலை விட்டவர்’ முண்டாசுப்பட்டி முதல் சரவணன் மீனாட்சி சீரியல் வரை – மறைந்தநடிகர் மதுரை மோகன் பற்றிய தகவல்.

0
171

சினிமாவுக்காக அரசாங்க வேலையை விட்டு வந்த மறைந்த நடிகர் மதுரை மோகன் குறித்து பலரும் அறியாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 40 ஆண்டு காலமாக பயணம் செய்திருந்தவர் மதுரை மோகன். இவர் மதுரையை சேர்ந்தவர். இவருக்கு அடையாளமே அவருடைய கம்பீரமான பெரிய மீசை தான். இந்த மீசையினால் தான் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

மேலும், முதலில் இவர் மதுரையில் அரசு வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அப்படியே இடையில் இவர் சென்னையில் இருந்து படப்பிடிப்புக்காக மதுரை, தேனி போன்ற பல மாவட்டங்களுக்கும் சென்று சினிமாக்காரர்களுக்கு லொகேஷன் பார்த்து தருவது, அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து இருந்தார். அப்போது தான் இவருக்கு நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சங்கிலி முருகனின் நட்பு கிடைத்தது. அதற்குப் பின் அவருக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைத்தது.

மதுரை மோகன் குறித்த தகவல்:

இவர் பிரபலமான நடிகர்களின் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, இவர் கும்பக்கரைத் தங்கய்யா, கமலஹாசனின் நடிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள், முண்டாசுப்பட்டி, சீமராஜா போன்ற பல படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் சமீபத்தில் வந்த வீரன் என்ற படத்தில் நடித்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

மதுரை மோகன் மரணம்:

-விளம்பரம்-

மேலும், சில மாதங்களாகவே இவர் நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவர் உடல்நிலை அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் இவர் சென்னை ஓமந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். பின் இன்று காலை இவர் உயிரிழந்தார். இவருடைய இழப்பு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

-விளம்பரம்-

காளி வெங்கட் பதிவு:

மேலும் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களுடைய இரங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் காளி வெங்கட் தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தம்.

பிரபலங்கள் அஞ்சலி:

ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை “முண்டாசுப்பட்டி” படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் ராம்குமார் அவர்களுக்கும்” என தெரிவித்துள்ளார். இவரை அடுத்து பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதோடு ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news