ப்பா, யாருனு தெரியுதா? அட, தெரியலயா. எப்படி மாறிட்டார் பாருங்க.

0
883
manobala
- Advertisement -

இந்த லாக்டவுன் வந்தாலும் வந்தது நடிகர் நடிகைகள் பலரும் உடற் பயிற்சி யோகா போட்டோ ஷூட் என்று சமூக வலைதளத்தில் புகைப்படங்களாக அள்ளி வீசி வருகின்றனர். நடிகைகள் தான் போட்டோ ஷூட் நடத்துவார்களா நடிகர்களும் நடித்துவார்கள் என்று படு ஸ்டைலான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை வியக்கவைத்துள்ளார் நடிகர் மற்றும் இயக்குனருமான மனோ பாலா.

-விளம்பரம்-

தமிழ்சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்து சென்றாலும் ஒரு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்து விடுகின்றார்கள் அந்தவகையில் நடிகர் மனோபாலா ஒருவர். ஆரம்ப காலத்தில் பாரதிராஜாவிற்கு துணை இயக்குனராக பணியாற்றினார் நடிகர் மனோபாலா. மேலும், இவரை சிபாரிசு செய்தது வேறு யாரும் இல்லை நம் உலகநாயகன் கமலஹாசன் தான்.

- Advertisement -

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார் நடிகர் மனோபாலா.மேலும் இந்த படத்தில் பஞ்சாயத்து நபராக ஒரு சிறிய காட்சியில்கூட நடித்திருப்பார் மனோபாலா அதன்பின்னர் பல்வேறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த மனோபாலா பின்னர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இவர் முதன்முதலில் கார்த்தி மற்றும் சுகாசினி வைத்து ஆகாயகங்கை என்ற படத்தை இயக்கியிருந்தார்.

View this post on Instagram

Vera Level #Transformation Of Actor #manobala

A post shared by Behind Talkies (@behindtalkies) on

அதன் பின்னர் பல்வேறு படங்களை இயக்கினார் மணவாளா இறுதியாக ஜெயராம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான நைனா படத்தை இயக்கியிருந்தார். மேலும், சதுரங்க வேட்டை, பாம்பு சட்டை ,சதுரங்க வேட்டை 2 போன்ற பல்வேறு படங்களை தயாரித்திருக்கிறார் மனோபாலா. அதுமட்டுமல்லாது சன் டிவியில் ஒளிபரப்பான புன்னகை பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 7 7 போன்ற சின்னத்திரை தொடர்களையும் மனோபாலா இயக்கியிருக்கிறார் இதுவரை 14 திரைப்படங்களை இயக்கிய மனோபாலா 19 சின்னத்திரை தொடர்களை இயக்கியுள்ளார். மேலும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்

-விளம்பரம்-

Advertisement