காதல் திருமணம் செய்து கொண்ட பாரதிராஜா மகனுக்கு இவ்ளோ பெரிய மகள்களா – வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.

0
396
manoj
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்பவர் பாரதிராஜா. இவருடைய படங்கள் எல்லாமே கிராமத்து மண்வாசனை, உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் கொண்டது. அதுமட்டும் இல்லாமல் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனராக பாரதிராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவருடைய மகன் தான் மனோஜ். இவரும் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர். 1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு நடிகராக அறிமுகமானார். அதற்குப் பிறகு இவர் கடல்பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவரால் பெரிய அளவில் சினிமாவில் சாதிக்க முடியவில்லை.

-விளம்பரம்-

பின்பு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் நடிப்பிலிருந்து விலகி பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்திருக்கிறார். தற்போது இயக்குனராகவும்,நடிகராகவும் உள்ளார். கடைசியாக இவர் ஈஸ்வரன், மாநாடு ஆகிய இரு படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.நடிகர் மனோஜ் நந்தனா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

- Advertisement -

மனோஜ் மனைவி மற்றும் மகள்கள் :

இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்கள். பின் இரு வீட்டார் சம்மதத்துடன் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். சமீபத்தில் நடிகர் மனோஜ் தனது மனைவி மற்றும் மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமுக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.மனோஜ் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவர் சினிமா துறையை குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

சினிமாவில் மனோஜ் உடைய அனுபவம்:

சினிமாவும், இசையும் தான் என்னுடைய சுவாசமாக இருந்தது. ஆனால், நான் நடிகனாகுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. பன்னிரண்டாம் வகுப்பு முடிப்பதற்கு முன்பு படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்துவிட்டேன். அப்பாவிடம் வேலை செய்யலாம் என்று கேட்டபோது, அவர் நீ எங்ககிட்ட அசிஸ்டன்ட் சேர்ந்தா அப்பா – மகன் உறவு தான் மேலோங்கும். தொழில் கற்றுக்கொள்ள முடியாது. அதனால் நீ வெளியே யாராவது சொல்லு நான் சேர்த்து விடுகிறேன் என்றார். உடனே நான் மணிரத்தினம் கிட்ட சேர்த்து விட சொன்னேன். அடுத்த நாளே மணிரத்னம் சார் ஆபீஸ்க்கு போய் சேர்த்துவிட்டார்.

-விளம்பரம்-

மனோஜ் தவறவிட்ட படங்கள் :

பம்பாய் தான் என்னுடைய முதல் படம். மணிரத்னம் சார் என்னுடைய குரு. சினிமாவில் இருந்து கொண்டே அமெரிக்காவில் தியேட்டர் ஆர்ட்ஸ் கோர்ஸ் முடித்து வந்தேன். பின் 16 வயதிலேயே மியூசிக் ஆல்பம் ஒன்று பண்ணி இருந்தேன். அதில் பாடல்களை நானே கம்போஸ் செய்து இருக்கேன்.தாஜ்மஹால் படத்திற்குப் பிறகு சமுத்திரம், கடல்பூக்கள், அல்லி அர்ஜுனா போன்ற பல படங்கள் பண்ணினேன். கற்றது தமிழ்,குஷி இதெல்லாம் நான். நடித்திருக்க வேண்டிய படங்கள் நடுவில் கொஞ்சம் கேப் விழுந்து விட்டது. இப்போ மறுபடியும் ஈஸ்வரன் படம் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறேன்.

விருமன் படத்தில் மனோஜ்:

தொடர்ந்து மூன்று படங்களில் நடித்துக் கொண்டு வருகிறேன். இப்போது கார்த்திக் உடைய விருமன் படப்பிடிப்பு பிஸியாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். சூர்யா, கார்த்தி, சங்கர் பொண்ணு அதிதி மூணு பேருமே என்னோட சின்ன வயது நண்பர்கள். அதேபோல தயாரிப்பாளர் ராஜசேகர் அவர் வீடும் எங்க வீட்டுக்கு எதிர்வீடு. அத்தனை பேரையும் மறுபடியும் ஒரே குடும்பமாக சந்திக்கிற வாய்ப்பு இந்த படம் மூலம் கிடைத்திருக்கிறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement