நடிகர் மன்சூர் அலிகான் ICUவில் மருத்துவமனையில் அனுமதி – (தனக்கு ஒன்னும் ஆகாதுன்னு சொன்னரே)

0
1983
mansoor
- Advertisement -

நடிகர் மன்சூர் அலிகான் அறுவை சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் மன்சூர் அலிகான். இவர் 90 கால கட்டங்களில் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும், துணை கதாபாத்திரத்தில் தான் நடித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து உள்ளார். இவர் திரைப்பட நடிகர் என்பதை தாண்டி ஒரு அரசியல்வாதியும் ஆவார். அதே போல இவர் சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர் போனவர்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வந்த விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலமானார். விவேக் மருத்துவமனையில் அனுமப்திப்பட்ட போது மருத்துவமனை சென்ற நடிகர் மன்சூர் அலிகான், விவேக்கிற்கு ஏன் தடுப்பூசி போடீங்க என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘தடுப்பூசிதான் அவரது இன்றைய நிலைக்குக் காரணம். அவருக்கு மட்டும் ஏதாவது ஆனால் சும்மா இருக்க மாட்டேன்” என்று பேட்டி அளித்தார். தொடர்ந்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்தியாவில் கரோனாவே இல்லை, எதற்காக முகக்கவசம் அணிகிறீர்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். சுகாதாரத் துறைச் செயலர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

இதையும் பாருங்க : சமந்தா நடித்த இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை – ரீல் சமந்தா பவித்ராவின் ஆசைய பாருங்க.

- Advertisement -

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படி ஒரு நிலையில் மைசூர் அலிகான் மீது சென்னை மாநகராட்சி சார்பில் 10-வது மண்டல சுகாதார அலுவலர் பூபேஷ் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீஸார் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்தனர். தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மன்சூர் அலிகான் ஜாமீன் கேட்ட போது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள், மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கினார். அபராதத் தொகையை தடுப்பூசி வாங்குவதற்காக தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பெயரில் வரைவோலையாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இப்படி ஒரு நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தார் நடிகர் மன்சூர் அலிகான். சமீபத்தில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் இவர் சுயேட்ச்சி வேட்பாளாராக தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தில் போது மீன் வெட்டுவது, நாயுடன் பேசுவது, பிச்சை காரருடன் அமர்ந்து பேசியது என்று பல விதமான பிரச்சாரத்தை செய்தார் மன்சூர் அலி கான்.இந்த தொகுதியில் அவர் பெற்ற வாக்குகள் வெறும் 426 ஆகும். இது அவரது தரப்பினர்களுக்கு பெரும் அதிர்ச்சிஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement