விஜயை பத்தி நான் அப்படி பேசவே இல்லை – சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்த மன்சூர் அலிகான்

0
254
- Advertisement -

விஜய் குறித்த சர்ச்சை கருத்துக்கு நடிகர் மன்சூர் அலிகான் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் விஜய். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அரசியல் பணிகளையும் செய்து கொண்டு வருகிறார். இதற்கிடையில் நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், சினிமாவை கெடுடுப்பதற்கே சிலர் கட்சியை ஆரம்பித்து இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசியிருந்தார்.

-விளம்பரம்-

இப்படி இவர் கூறி இருந்தது நடிகர் விஜயை தாக்கி தான் என்று நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் நடிகர் மன்சூர் அலிகான், நான் நடிகர் சங்கம் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய வார்த்தை தான் தற்போது சர்ச்சையாக இருக்கிறது. அதில் நான் சினிமாவை கெடுப்பதற்காக சிலர் கட்சி ஆரம்பித்துள்ளதாக தான் சொன்னேன். அதை திரித்து சில பேர் விஜயை தாக்கி பேசுவதாக சோசியல் மீடியாவில் கூறி வருகிறார்கள்.

- Advertisement -

மன்சூர் அலிகான் பேட்டி:

தம்பி விஜய் கட்சி ஆரம்பித்திருக்கும் நிலையில் அவருடைய புகழை கெடுப்பதற்காகவும், விஜய்- மம்முட்டி- மோகன்லால் ஆகியோர் அரசியலில் இறங்குவதை தடுப்பதற்காக சினிமாக்காரர்கள் மீது அவதூறாக பரப்பி வருகிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக பேசியிருந்தேன். ஆனால், விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து இருப்பது குறித்து நான் தவறாக பேசியதாக மாத்தி கூறுகிறார்கள். நான் அதுபோன்று எதுவுமே பேசவில்லை.
அந்த பேட்டியில் நான் தெளிவாக தான் பேசியிருந்தேன்.

விஜய் பற்றி சொன்னது:

எதற்கு இந்த மாதிரி தேவையில்லாமல் தவறான செய்திகளை பரப்புகிறார்கள். தம்பி விஜயின் உடைய கவனத்துக்கு இதைக் கொண்டு போக வேண்டும். சினிமா நடிகர்களை கேவலப்படுத்தி அவருடைய இமேஜை கெடுக்க பார்க்கிறார்கள். தவறான செய்திகளை பரப்புவதன் மூலம் அவர்களுக்கு கெட்ட பேரையும் வாங்கி கொடுக்க பார்க்கிறார்கள் என்றெல்லாம் கூறி இருக்கிறார். மேலும், மன்சூர் அலிகான்- விஜய் இணைந்து சில படங்களில் நடித்திருக்கிறார்கள். அந்தவகையில் விஜயின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருந்த லியோ படத்தில் கூட மன்சூரலிகான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

விஜய் அரசியல்:

கடந்த பிப்ரவரி மாதம் தான் தமிழக வெற்றிக் கழகம் என்று தன் கட்சியின் பெயரை விஜய் அறிவித்திருந்தார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடி ஏற்றியிருந்தார். கட்சி கொடியை ஏற்றுவதற்கு முன்பு உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி, கொடியை ஏற்றி இருந்தார்.

மாநாடு குறித்த தகவல்:

அந்த கொடியில் வாகை மலரும், இருபக்கம் யானை படமும் இடம் பெற்றிருக்கிறது. பலரும் விஜய்யின் கட்சி கொடியை பாராட்டி வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். தற்போது மாநாட்டிற்கான வேலையை தான் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி இருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தான் தமிழக வெற்றிக் கழகத்தினுடைய முதல் மாநாடு நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டிற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு விழுப்புரம் டி.எஸ்.பியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆன்ந்த் மனு கொடுத்து இருந்தார். போலீஸ் அனுமதி கொடுத்தவுடன் மாநாடு ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement