மன்சூர் அலிகான் மகன் யார் தெரியுமா ? படத்துல நடிக்கிறாரா ! புகைப்படம் உள்ளே

0
897

மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகர் ஆவார். 1991ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் நடித்த வில்லன் கேரக்டர் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

Alikan

இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கஜினி, செர்ஷா மற்றும் துக்ளக். இதில் துக்ளக் தற்போது படங்களில் நடிக்க தயாராகி உள்ளார். ‘கடம்பன் பாறை’ என்ற படத்தில் நடித்து வருகிறார் துக்ளக் அலிகான்.இந்த படத்தின் சூட்டிங் கடந்த 6 மாதமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தினை இயக்குவது வேறு யாரும் இல்லை, அவருடைய அப்பா மன்சூர் அலிகான் தான். காட்டிற்குள் செல்லும் துக்ளக் அலிகான் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு மாட்டிக்கொள்கின்றனர்.

அதிலிருந்து எப்படி தப்பித்து வருகிறார் என்பது தான் கதை. இதில் ஹீரோயின்களாக அனுராகவி மற்றும் ஜென்னி பெர்னாண்டஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.

Alikhan

Mansoor-alikhan-son

இந்த படத்தில் வரும் பாடல் காட்சிக்காக, ஷோபி மாஸ்டர் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகியோரிடம் டான்ஸ் கற்றுள்ளார் துக்ளக். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவின் காட்டிற்குள் நடந்தது. க்ளைமாக்ஸ் காட்சிகள் பான்செரியில் சூட்டிங் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என தெரிகிறது.