நிறைய கெட்ட வார்த்தை பேசுவாரு – பீர் வாங்கி கொடுப்பாரு – அஜித் குறித்து அறியாத பல விஷயங்களை சொன்ன நடிகர்.

0
1105
ajith

தமிழ் சினிமாவில் ஜென்டில் மேன் யார் என்றால் நம் நினைவிற்கு முதலில் நினைவிற்கு வருவது அஜித் தான். ஆனால், திருமணத்திற்கு பின்னர் அஜித் எப்படி இருந்தார் என்பதை இயக்குனரும் நடிகைரமான மாரிமுத்து கூறியுள்ளார். நடிகர் மாரிமுத்து ஆரம்ப காலத்தில் இணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் கண்ணும் கண்ணும், புலி வால் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். அதே போல உதயா, கடைக்குட்டி சிங்கம், யுத்தம் செய், சண்டக்கோழி, பரியேறும் பெருமாள் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் மாரிமுத்து அஜித் நடித்த ஆசை படத்தில் இணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாரிமுத்து, அஜித் குறித்து பேசுகையில் ‘அஜித் மிகவும் ஜாலியாக இருப்பார் கெட்ட வார்த்தை நிறைய பேசுவார். அதாவது செல்லமாக திட்டுவது போல நிறைய கெட்ட வார்த்தைகள் பேசுவார். சூட்டிங் ஸ்பாட்டில் எங்களுக்கு பீர் வாங்கி கொடுப்பார். சூட்டிங் முடிந்த பின்னர் நாங்கள் அனைவரும் பீர் அடிப்போம். அந்த அளவிற்கு அஜித் ஜாலியாக இருப்பார். என்ன வேண்டுமானாலும் செய்து கொடுப்பார்.

- Advertisement -

அதுபோல எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். ஒருமுறை என்னுடைய பையனை பள்ளியில் சேர்க்கும்போது பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக அவரிடம் கேட்டிருந்தேன். ஆனால் அவரோ என்னுடைய மகன் பத்தாம் வகுப்பு படிக்கும்வரை வருடா வருடம் பள்ளி கட்டணத்தை செலுத்தி இருக்கிறார். ஷாலினியை திருமணம் செய்து கொண்ட பிறகு தான் அஜித் திருமண வாழ்க்கைக்கு சென்று வேற ஒரு மனிதராக மாறி விட்டார். இது அனைவருக்குமே வரும் ஒரு விஷயம்தான். முன்பு இருந்தது போல் ஜாலியாக இருக்க முடியாது. குடும்பத் தலைவனாக ஆகும் போது அதற்கு நிறைய பொறுப்புகள் இருக்கிறது.

வீடியோவில் 12 : 08 நிமிடத்தில் பார்க்கவும்

இந்த எல்லைக்குள் தான் வாழவேண்டும் என்ற ஒரு நிர்பந்தமும் இருக்கும். திருமணத்திற்கு முன்னால் எனக்கு பல உதவிகளை செய்து இருக்கிறார் அஜித். அமர்க்களம் படம் வரை என்னுடைய மகனுக்கு உதவி செய்திருந்தார். அதன் பின்னர் திருமணம் முடிந்த பின்னர் அவருடைய வாழ்க்கையில் அவர் செட்டிலாகிவிட்டார். குடும்பத்திற்காக கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றிக் கொண்டார் என்றுதான் நான் நினைக்கிறேன். அதன் பின்னர் நான் எப்போதாவது வெளியில் பார்த்தால் பேசுவேன். ஆனால், நடிகரான பின்னர் அவருடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை விரைவில் நடிப்பேன்.

-விளம்பரம்-
Advertisement