10 பைசா வாங்காம கேப்டன் செஞ்ச உதவிய, விஜய் அவர் மகன்களுக்கு செய்வாரா ? விஜய் பட நடிகர் கேட்ட நச்சின்னு கேள்வி

0
820
- Advertisement -

ஒரு பைசா கூட வாங்காமல் நடித்துக் கொடுத்த கேப்டன் விஜயகாந்த் மாதிரியே விஜய் செய்வாரா? என்று நடிகர் மீசை ராஜேந்திரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாகவே, சினிமா உலகில் ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு அடைமொழி பெயர் இருக்கும். இதை எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் தொடங்கி தற்போது வரை ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்கு அடைமொழி பெயர் வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், அந்த பெயரை அடுத்த தலைமுறையினருக்கு வைக்க ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள். அந்த தமிழ் சினிமாவில் சில வருடங்களாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று ஒரு குரூப் கூறி வருகின்றனர். இன்னொரு குரூப் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்ற கருத்தில் கோலிவுட்டில் சிலருக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

நடிகர் மீசை ராஜேந்திரன் அளித்த பேட்டி:

இதனால் பலரும் ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினிகாந்த் தான் என்று பல மேடைகளில் சொல்லி வருகிறார்கள். இந்த நிலையில் இதை வலியுறுத்தும் வகையில் நடிகர் மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், தற்போது சோசியல் மீடியாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் தான் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் கூட அஜித், விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

விஜய்-ரஜினி இடையே உள்ள வித்தியாசம்:

ஆனால், சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான். இதில் மாற்று கருத்து கிடையாது. தற்போது இருக்கும் சினிமாவில் சிவாஜி, கமல், ரஜினிகாந்த் ஆகியோரின் சாயல் இல்லாமல் ஒரு நடிகருமே இல்லை. விஜய், ரஜினியை பின் தொடர்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். ரஜினிகாந்த் உலகம் முழுவதும் பிரபலமானவர். ஜப்பான் போனால் கூட அவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால், விஜய் ஜப்பானில் தெரியுமா? விஜய்க்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தெரிந்தவர்.

-விளம்பரம்-

விஜய் திரைப்பயணம்:

ஆனால், ரஜினிகாந்த் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு தெரிந்தவர். இதுதான் இருவருக்கும் இடையே இருக்கும் வித்தியாசம். மேலும், 1995ஆம் ஆண்டு விஸ்வா என்ற படத்தின் பூஜைக்கு ரஜினிகாந்த் வந்திருந்தார். அப்போது அவரை விஜய் எப்படி வரவேற்றார் என்பது எனக்கு தெரியும். ரஜினி காரிலிருந்து இறங்கும்போது விஜய் அவசர அவசரமாக சென்று அவரை வணங்கி வரவேற்றார். அப்போது அவர் முன் விஜய் கையை கட்டிக் கொண்டு நின்றார். விஜய் எப்போதும் தனிமையில் தான் இருப்பார். ஆனால், ரஜினிகாந்த் சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரிடமும் சகஜமாக பழகக் கூடியவர்.

விஜயகாந்த் குறித்து சொன்னது:

விஜயின் முதல் படம் நாளைய தீர்ப்பு அவருக்கு தோல்வி ஆனது. இரண்டாவது படமாக செந்தூரப்பாண்டி படத்திற்கு ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் விஜய் அப்பா எஸ் ஏ சந்திரசேகருக்கு விஜயகாந்த் நடித்துக் கொடுத்தார். இது குறித்து விஜய் என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறியிருக்கிறார். இன்றைக்கு நான் இவ்வளவு வளர்ந்து இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் கேப்டன் தான். அதனால் கேப்டன் இல்லை என்றால் இன்று விஜய் இல்லை. செந்தூர பாண்டி நடித்த சமயத்தில் விஜயகாந்த் மிகப்பெரிய நடிகர். இருந்தாலும், விஜய் படத்தில் நடித்தார். ஆனால், இன்று விஜயகாந்த் மகன்களுக்கு விஜய் இப்படி செய்வாரா? அந்த மனசு அவருக்கு இருக்கா? என்று கேட்டிருக்கிறார். மேலும், இவர் திருப்பாச்சி படத்தில் விஜயுடன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement