விஜய்யிடம் இதை கத்துக்கணும் – மோகன் சொன்ன அந்த விஷயம் என்ன தெரியுமா?

0
484
- Advertisement -

விஜய்யிடம் இதை கற்றுக் கொள்ளணும் என்று நடிகர் மோகன் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது. இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை இந்த நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் சினேகா, லைலா, மோகன், மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

- Advertisement -

விஜய் கோட் படம்:

தற்போது கோட் படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தான் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது பாடல் வெளியாக இருக்கிறது. இந்த படம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

மோகன் பேட்டி:

இந்த நிலையில் நடிகர் மோகன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் விஜய் குறித்து சொன்னது, மக்களால் தேர்வு செய்யப்பட்ட பெரிய மிகப்பெரிய நடிகர் விஜய் சார். இவருடன் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பு எனக்கு வந்திருக்கிறது. இதற்கு வெங்கட் பிரபுவிற்க்கும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும் தான் நன்றி சொல்கிறேன். விஜயிடம் இருந்த நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் ரொம்ப ரொம்ப அமைதியான நபர்.

-விளம்பரம்-

விஜய் குறித்து சொன்னது:

இந்த அளவுக்கு அமைதியாக இருக்கிற அந்த குணத்தை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளணும். நான் நிறைய முறை இதை விஜய் இடம் சொல்லி இருக்கிறேன். அவரிடம் இருக்கும் சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்று. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி அது ரொம்ப அமைதியாக உட்கார்ந்து பொறுமையாக கவனிப்பார். இதை நான் அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன் என்று கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவின் 80,90 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் மோகன்.

மோகன் குறித்த தகவல்:

இவரது நடிப்பின் மூலம் தனெக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். இவர் எந்த ஊரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுலகில் கொடி கட்டி பறந்தவர். இவருடைய எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. வருடம் வருடம் சிறந்த நடிகர் விருதையும் இவர் தான் பெறுவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகலும் சக்கை போடு போட்டு கொண்டு நடித்தார். இவரை எல்லோரும் மைக் மோகன் என்று தான் அழைப்பார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் ஹரா படத்தில் நடித்து இருக்கிறார்.

Advertisement