பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்கடியான் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெயம்ரவின் கெட்டப் என்ன தெரியுமா ?

0
15343
jayam-ravi
- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா இணைந்து இப்படத்தை தயாரித்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதை தமிழ் சினிமாவில் நிஜமான மல்டி ஸ்டாரர் படம் என்று கொண்டாடினார்கள். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் என்று ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம்.

-விளம்பரம்-
Image result for ponniyin selvan

- Advertisement -

சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது தான் கல்கி. ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இயக்குனர் மணிரத்னம் தற்போது நீண்ட நாள் கனவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இப்போது மீண்டும் கையில் எடுத்திருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா , அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து இம்முறை ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குகிறார் மணிரத்தனம். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

இதையும் பாருங்க : மீண்டும் நயன்தாராவுடன் இனைந்த பிகில் பட நடிகை. யார் தெரியுமா ?

-விளம்பரம்-

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. மேலும்,இந்த படத்தில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப் பச்சன், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி, பெரிய பழுவேட்டரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். அதோடு இந்த படத்தில் பாலிவுட், டோலிவுட், கோலிவுட், மாலிவுட் என்று இந்திய சினிமாவின் உள்ள அனைத்து சினிமாத்துறைகளில் நடிக்கும் நடிகர்கள் எல்லாரையும் இந்த படத்தில் பார்க்கலாம். பொன்னியின் செல்வன் படத்தில் ‘ஷாம் கவுஷல்’ ஸ்டண்ட் மாஸ்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Image result for ஆழ்வார்கடியான்

இவர் ஏற்கனவே இந்தியில் பல படங்களுக்கு சண்டைக் காட்சிகளை வடிவமைத்தவர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகர்கள் எல்லோரும் தலைமுடியை வளர்க்கவும், வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பழைய கலைகளை கற்றுக்கொள்ளவும் பயிற்சிகள் எடுத்துக்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், இந்த படத்தில் ஆழ்வார்கடியான் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெயம் ரவி அந்த கதாபாத்திரத்திற்காக மொட்டை அடிக்க இருக்கிறாராம். . மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது. தற்போது நடிகர் ஜெயராம், கார்த்தி, ஜெயம் ரவி மூவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புடன் உள்ளார்கள்.

Advertisement