இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா படு விமர்சியாக கொண்டாடபட்டு வருகிறது. ஆங்காங்கே விநாயகர் சிலை வைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா படு கோலாகலமாக கலைகட்டியது. மேலும்,சமூக வலைதளத்தில் பிரபலங்களும் விநாயகர் சிலையை வழிபட்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
Ganesh Chaturthi wishes #GaneshaChaturthi pic.twitter.com/Yi8wlLNFql
— Mohanlal (@Mohanlal) September 13, 2018
அணைத்து தெரு வீதிகளிலும் ஜல்லிக்கட்டு விநாயகர், ராணுவ விநாயகர் என்று வித விதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரபல மலையாள நடிகர் மோகன் லால் இந்த திருநாளை முன்னிட்டு வித்யாசமான வினாயகர் சிலையுடன் போஸ் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் மோகன் லால் விநாயகர் சிலை முன்பு நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. அந்த புகைப்படத்தில் இருக்கும் விநாயகர் சிலை குத்துச் சண்டை விளையாட்டு வீரர் போல கையில் உரை அணிந்த வாரு நின்றுகொண்டிருக்கிறார்.
தற்போது இந்த புகைப்படம் மிகவும் வைரலாக பரவி வருகிறது. நடிகர் மோகன் லால் குத்துச் சண்டை விநாயகருடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தின் அழகை நீங்களே பாருங்கள்