தாத்தாவான சந்தோஷத்தில் நடிகர் எம்.எஸ் பாஸ்கர், மகிழ்ச்சியில் மொத்த குடும்பம் – குவியும் வாழ்த்துக்கள்

0
155
- Advertisement -

நடிகர் எம்.எஸ் பாஸ்கர் மகளுக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் எம்.எஸ். பாஸ்கரும் ஒருவர். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே நாகப்பட்டினத்தில் தான். இவர் இதுவரை 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் டப்பிங் ஆர்டிஸ்டாக தான் தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு தான் எம்.எஸ் பாஸ்கர் அவர்கள் படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் முதன் முதலாக திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தின் மூலம் தான் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார்.
சினிமா உலகில் ஆரம்ப காலத்தில் இவர் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருடைய சிறந்த காமெடி, நடிப்பு ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. இவர் தமிழ் சினிமா உலகில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

எம்.எஸ் பாஸ்கர் குறித்த தகவல்:

மேலும், இவர் சினிமா உலகில் நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி குரல் கொடுப்பவரும் ஆவார்.
இவர் வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான அழகி, சின்ன பாப்பா பெரிய பாப்பா, கங்கா யமுனா சரஸ்வதி, செல்வி போன்ற தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. தற்போதும் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் அக்கரன்.

எம்.எஸ். பாஸ்கர் குடும்பம்:

அறிமுக இயக்குனர் அருண் கே பிரசாத் இயக்கத்தில் இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், வெண்பா, கபாலி விஸ்வநாத், பிரியதர்ஷினி, நமோ நாராயணன் வெண்பா, பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். சமூக விழிப்புணர்வு கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் ஷீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் ஆதித்யா என்ற மகனும் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

எம்.எஸ். பாஸ்கர் மகள் திருமணம்:

இதில் எம்.எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா அவர்கள் ’96’ படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்து அனைவரின் பாராட்டினையும் பெற்றிருந்தார். இதை தொடர்ந்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவரது மகள் ஐஸ்வர்யா டப்பிங் கலைஞராக உள்ளார். பல திரைப்படங்களில் ஹீரோயின்களுக்கு டப்பிங் செய்து இருக்கிறார். ரகுல் ப்ரீத்தி சிங், ராஷ்மிகா போன்ற பல முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் செய்து இருக்கிறார். இவர் 2021-ல் அகுல் சுதாகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தாத்தாவான எம்.எஸ் பாஸ்கர்:

இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்திருக்கிறார்கள். பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். இது அடுத்து ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதை சமீபத்தில் சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார். கடந்த ஆகஸ்ட் மாசம் ஐஸ்வர்யாவிற்கு எளிமையாக வளைகாப்பை நடத்தி இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஐஸ்வர்யாவிற்கு நேற்று தீபத்திருநாள் அன்று அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதை ஐஸ்வர்யா பாஸ்கர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். தாத்தாவாகியிருக்கும் எம்.எஸ் பாஸ்கருக்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement