அஜித்திற்கு டப்பிங் கொடுத்துள்ள எம் எஸ் பாஸ்கர். நீங்க நம்பலானாலும் அதான் உண்மை.

0
1948
msbaskarajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் ஒரு காலத்தில் டப்பிங் கலைஞராக இருந்தவர் கள் தான். அவ்வளவு ஏன் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் விக்ரம் கூட ஒரு காலத்தில் டப்பிங் கலைஞராக இருந்தவர் தான். நடிகர் விக்ரம், பிரபுதேவா,அப்பாஸ், அஜித் என்று பல்வேறு நடிகர்களுக்கு அப்போதே டப்பிங் கலைஞராக பணியாற்றி இருக்கிறார். ஆனால், நடிகர் அஜித்திற்கு பட்டாபி, டப்பிங் கொடுத்திருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம்தான்.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். இவரது திரைப்படம் வெளியாகும் என்று சொன்னாலே போதும் தியேட்டர்கள் முன்னாடி திருவிழா போன்று ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அந்த அளவிற்கு கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது.

- Advertisement -

தல அஜித் அவர்கள் சினிமா உலகிற்கு வருவதற்கு முன் மாடலிங் தான் செய்து இருந்தார். இவர் அடிப்படையிலேயே ஒரு சிறந்த மாடல். ஆரம்ப காலத்தில் தல அஜித் அவர்கள் விளம்பரங்களில் நடித்து வந்தார். அதில் வரும் வருமானத்தை வைத்து தான் இவர் பைக் ரேசில் ஈடுபட்டு வந்தாராம்.தல அஜித் ஆரம்பகட்ட காலத்தில் விளம்பர படங்களில் நடித்துள்ளார். அப்படி இவர் நடித்த விளம்பர படம் ஒன்றிற்கு நடிகர் எம் எஸ் பாஸ்கர் தான் டப்பிங் கொடுத்துள்ளார்.

ஆம், அஜித் நடித்த ஒரு விளம்பர படத்திற்கு எம் பாஸ்கர் டப்பிங் கொடுத்து இருக்கிறார். நடிகர் எம் எஸ் பாஸ்கர், 1987 ஆம் ஆண்டு வெளியான திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து நடித்து வந்த எம் எஸ் பாஸ்கர், ஹாலிவுட் படங்களின் தமிழ் டப்பிஙகில் பல்வேறு படங்களில் குரல் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாம் தெலுங்கு நடிகர் பிரம்மானந்த தமிழ் படங்களில் டப்பிங் இவரது குரல் தான்.

-விளம்பரம்-
Advertisement