நடிகர் முரளியின் இரண்டாவது மகன் , மகள் யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

0
7214
murali-family

நடிகர் முரளி 1964ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தவர். இவர் பெங்களூரை சேர்ந்த அப்பாவிற்கும் தமிழகத்தை சேர்ந்த அம்மாவிற்கும் பிறந்தவர். இவருடைய அப்பா சித்தலிங்கையா ஒரு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். இதனால் சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

murali

1984ஆம் ஆண்டு பிரேமா பர்வா என்னும் கன்னட திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் அமீர் ஜோன் இயக்கத்தில் பூவிலங்கு என்னும் படத்தில் தமிழில் அறிமுகம் ஆனார். கிட்டத்தட்ட 60க்கும் மேற்ப்பட்ட படங்கள் ஹீரோவாக நடித்துள்ளார் முரளி.

இவர் நடித்த இதயம் என்னும் படத்தில் கடைசி வரை தன் காதலை சொல்லாமலே இறந்துவிடுவார். இதனால் இவருக்கு இதயம் முரளி என்ற பெயரும் உண்டு. அதன் பின்னர் காலெமல்லாம் உன்மடியில், புது வசந்தம், தப்பு கணக்கு, குடும்பம் ஒரு கோவில், இதயம் உள்ளிட்ட பல நல்ல படங்களில் நடித்துள்ளார்.

Akash

murali family

Murali-son

1987ஆம் ஆண்டு ஷோபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அதர்வா மற்றும் ஆகாஷ் என்ற மகன்களும், காவ்யா என்ற மகளும் உள்ளனர். அதர்வா தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

murali-daughter

கடந்த 2010ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக மாரடைப்பு வந்த இறந்து போனார். இவரது மறைவுக்கு தமிழ் திரையுலகமே திரண்டு அஞ்சலி செலுத்தியது.