என்னது ஜாக்கி சானுக்கு இந்த தமிழ் நடிகர்தான் டப்பிங் தராரா ? யார் தெரியுமா

0
10535
Jakie-chan and murali kumar

நாம் ஜாக்கி சான் படங்களை தமிழில் காண மிக முக்கிய காரணம் அவருடைய சண்டைக்காட்சிகளுக்கா தான்.அதையும் தாண்டி அவர் தமிழில் பேசும் சில காமெடியாக வசனமே காரணம் என்று கூட கூறலாம்.சைனாவில் பிறந்த ஜாக்கி சானை நாம் சென்னை பாஷயில் பேசிகேட்டிருக்கிறோம்,ரசித்திருக்கிறோம் அப்படி அவர் தமிழ் வசங்களை பேசும் குரலுக்கு பின் இருப்பவரின் பெயர் முரளிகுமார்.

murali-kumar

நடிகரும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான இவரை நீங்கள் நிறையபடங்களிலும்,சீரியல்களிலும் கண்டிப்பாக பார்திருப்பீர்கள்.
இவர் தான்ஜாக்கி சான் படங்களில் அவருக்கு தமிழி படங்களில் டப்பிங் கொடுப்பவர் ஜாக்கி சான் பேசும் அனைத்து வசனங்களையும் தமிழில் மிகவும் அழகாக டப் செய்திருப்பார். மேலும் ஜாக்கி சான் படங்களில் அவர் சண்டை போடும் போது அவ்வளவாக வசனங்கள் இருக்காதம் ஆனால் அந்த படம் தமிழில் டப் செய்யும் போது இவரே தேவையான இடங்களில் காமெடியாக ஏதாவது பேசிவிடுவாராம்.

இவர் ஜாக்கி சான் படங்களை தவிர ஹாலிவுட் ஹீரோகளான ஜேம்ஸ் பான்ட் ஹீரோ ரோஜர் மோரே, கோஸ்ட் ரைடர் படத்தில் நடித்த நிக்கோலஸ் கேஜ்,ஹாரிசன் போர்ட் போன்ற பல நடிகர்களின் தமிழ் படத்தில் டப்பிங் பேசியுள்ளாராம்.

Actor-murali-kumar

அதை தவிர இவர் தமிழிலும் பல படங்களில் டப்பிங் செய்துள்ளார் அதில் குறிப்பாக சொல்லபோனால் மாதவன் நடித்த ரன், மற்றும் விஷால் நடித்த சண்டைக்கோழி போன்ற படங்களில் நடித்த வில்லன்களுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். அதிலும் இவருக்கு ரன் படத்தில் வில்லனுக்கு டப்பிங் செய்ததற்காக தமிழில் சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்ற விருதும் வழங்கப்பட்டது