பாட்டாசு வெடித்த சகோதரி. விபத்தில் இறந்த தாயார் – பேட்டியில் சோகத்தை பகிர்ந்த முரளியின் பழைய வீடியோ.

0
1338
murali
- Advertisement -

தென்இந்திய சினிமா திரை உலகில் 80, 90களில் நடித்த முன்னணி நடிகர்களுள் ஒருவர் தான் முரளி. இவரை அதிகம் இதயம் முரளி என்று தான் அழைப்பார்கள். முரளி அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் 70க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.இதயம் என்ற படத்தின் மூலம் தான் இவர் மக்களிடையே அதிகமாக பிரபலமானார். முரளியின் தந்தை சித்தலிங்கையா. இவர் பல படங்களை தயாரித்து உள்ளார் .

-விளம்பரம்-

2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி யாரும் நினைத்துப் பார்க்காத அளவில் சோகம் நடந்தது. முரளிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அவருக்கு 46 வயது தான். இந்நிலையில் நடிகர் முரளி அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் தன்னுடைய தாய் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதில் அவர் கூறியிருப்பது, முதன் முதலில் நான் சினிமாவில் நடிக்க காரணமாக இருந்தது என் தாய் தான். என் தாய் தான் என் தந்தையிடம் என்னை வைத்து படம் எடுக்க சொன்னார். எந்த ஒரு காலகட்டத்திலும் நான் எவ்வளவு சோகமாக இருந்தாலும் எனக்கு ஆறுதலாகவும், துணையாகவும், பக்கபலமாகவும் நின்றவர் என் தாய். அவர் தற்போது இல்லை. என் தாய் 1999 ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.

தீபாவளி பண்டிகை அன்று என்னுடைய அக்கா கீழே பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். பால்கனியிலிருந்து என்னம்மா பார்த்துக் கொண்டிருந்தார். விளக்கெல்லாம் பக்கத்தில் ஏற்றி வைத்திருக்கபட்டு இருந்தது. அப்போது என் அம்மாவின் புடவையில் நெருப்பு பற்றி விட்டது. என் அம்மா பயந்து பின்னால் போவதற்கு பதில் முன்னாடி போய் விழுந்து விட்டார். அந்த இடத்திலேயே என் அம்மா இறந்துவிட்டார். இது ஒரு விபத்து என்று மனம் பதற வைக்கும் அளவிற்கு கூறினார்.

-விளம்பரம்-
Advertisement