ரோட்டில் இருக்கும் குப்பையை பொறுக்கும் பிரபல நடிகர்.! வைரலாகும் வீடியோ உள்ளே.!

0
647
Naasar

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்கள் பட்டியலில் நாசருக்கு ஒரு மிக பெரிய இடமுண்டு. ரஜினி, கமல் காலகட்டத்தில் இருந்து இன்று வரை பல வில்லன் கதாதபாத்திரத்திலும், குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் நாசர் குப்பை பொறுக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

actor naasar

தமிழில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்துள்ள நடிகர் நாசர். தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த ஒரு அற்புத கலைஞராக விளங்கி வருகிறார். சமீபத்தில் தெலுங்கு, தமிழ், இந்தி என்று பல்வேறு மொழிகளில் வெளியான பாகுபலி என்ற பிராமாண்ட படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் நாசர் ரோட்டில் குப்பை பெருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அதில் ரோட்டில் இருக்கும் குப்பைகளை அள்ளிச்சென்று அதனை தானே குப்பை தொட்டியில் போடுகிறார் நாசர். அந்த வீடியோ ஏதோ ஒரு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது போல தான் தெரிகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சினிமா உலகில் ஒரு மாபெரும் நட்சத்திரமாக இருக்கும் நாசர். எந்த ஒரு கூச்சமும் படாமல் ரோட்டில் இது போன்ற செயலை செய்துள்ள நாசரை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், ஒரு சிலரோ இவர் மீது கவனத்தை செலுத்த வேண்டும் என்று தான் இது போன்ற விளம்பரங்களை செய்துள்ளார் என்று கூறி வருகின்றனர். நடிகர் நாசர் மீது நடிகர் சங்க தேர்தலில் போது மக்களுக்கு ஒரு சில எரிச்சல் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.