தங்களுடைய காதல் கதை குறித்து முதன் முதலாக மனம் திறந்து சோபிதா- நாக சைதன்யா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இதற்கிடையில் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர்களின் விவாகரத்திற்கு பிறகு நாக சைதன்யா அவர்கள் சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் உலாவி வந்தது.
நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம் :
அதைத்தொடர்ந்து, மீடியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் எளிமையாக நாக சைதன்யாவின் வீட்டில் நடந்தது. அதன் பின் சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி இருந்தது. ஆனால், சமந்தா ரசிகர்கள் நாக சைதன்யாவை கடுமையாக விமர்சித்து இருந்தார்கள். அதைத்தொடர்ந்து, கடந்த டிசம்பர் நாலாம் தேதி இரவு 8: 13 மணிக்கு , நாகர்ஜுனா குடும்பத்துக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள நாகர்ஜுனா ஸ்டுடியோவில் நாக சைதன்யா- சோபிதா திருமணம் நடைபெற்றது.
நாக சைதன்யா- சோபிதா திருமணம் :
குறிப்பாக இந்த திருமணம் நாக சைதன்யாவின் தாத்தா அக்கினேனி நாகேஸ்வர ராவின் சிலை முன் நடைபெற்றது. இந்த திருமணத்தில் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் சந்தோசமாக தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தங்களுடைய காதல் கதை குறித்து முதன் முதலாக மனம் திறந்து சோபிதா- நாக சைதன்யா அளித்த பேட்டியில், எங்களுடைய காதல் கதை instagram-ல் தான் ஆரம்பித்தது. எப்போதுமே instagram-யில் ரசிகர்கள் எனக்கு அனுப்பும் கேள்விகளை பார்ப்பேன்.
நாக சைதன்யா-சோபிதா பேட்டி:
அப்போது ரசிகர், நாக சைதன்யா உங்களை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்கிறார். ஆனால், நீங்கள் ஏன் அவரை பாலோ செய்யவில்லை என்று கேட்டார். அப்போது தான் நான் நாக சைதன்யாவை கவனிக்கவே ஆரம்பித்தேன். அந்த ரசிகரின் கேள்விக்கு பின் தான் நாக சைதன்யா உடைய இன்ஸ்டாவில் அக்கவுண்டை செக் செய்தேன். அப்போது அவர் வெறும் 70 பேரை மட்டும் தான் பாலோ செய்தது தெரிந்தது. அதில் நானும் ஒருத்தி என்பதை பார்த்து எனக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. உடனே நானும் அவரை பாலோ பண்ணினேன். சில மணி நேரத்திலேயே நாங்கள் இருவரும் மெசேஜ் செய்ய தொடங்கினோம்.
காதல் கதை:
அப்படியே நாங்கள் நண்பர்களாக மாறினோம். நானும் நாக சைதன்யாவும் எங்களுடைய முதல் டேட்டிங்கை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் செய்தோம். இருவரும் காலை உணவு மும்பையில் சாப்பிட வந்தோம்.
எங்களுடைய காதலில் எந்த ஒரு சிறப்பான நிகழ்வு எல்லாம் கிடையாது. அது இயல்பாக நடந்தது. எங்களுடைய குடும்பங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு தான் திருமணத்திற்கு சம்மதம் வாங்கி பாரம்பரிய முறைப்படி நிச்சயதார்த்தம், திருமண சடங்குகளை நடத்தி இருந்தோம். காதல் வாழ்க்கையில் எங்களுக்கு எது தேவை, எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை தெரிந்து கொண்டோம். நாங்கள் எதுவும் பெரிதாக விரும்பவில்லை. குடும்பத்துடன் உணவு உண்பது, நேரம் ஒதுக்குவது தான் எங்கள் இருவருக்கும் பிடிக்கும் என சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்