என்னை எல்லோரும் குற்றவாளி போல பார்க்கிறார்கள் – விவாகரத்து பற்றிய சர்ச்சைகளுக்கு நாக சைதன்யா கொடுத்த பதிலடி

0
157
- Advertisement -

தன்னுடைய விவாகரத்து குறித்து மனம் திறந்து நடிகர் நாக சைதன்யா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் நாக நாகார்ஜுனா மகன் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது நாக சைதன்யா நடிப்பில் வெளியான படம் தண்டேல்.

-விளம்பரம்-

இந்த படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். ஏற்கனவே நாக சைதன்யா- சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லவ் ஸ்டோரி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து தண்டேல் படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சந்தூ மொண்டேடி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

நாக சைதன்யா குறித்த தகவல்:

இந்த படம் தமிழ், தெலுங்கில் இரு மொழிகளில் வெளியாகயிருக்கிறது. இந்த படம் நிஜ வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நாக சைதன்யா தன்னுடைய விவாகரத்து குறித்து கூறியிருந்தது, நாங்கள் இருவருமே எங்கள் சொந்த வழியில் செல்ல விரும்பினோம். எங்களுடைய சொந்த காரணங்களுக்காகத் தான் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். ஒருவரை ஒருவர் நாங்கள் மதிக்கிறோம். இந்த முடிவால் நாங்கள் எங்கள் வாழ்க்கையில் முன்னேறி வருகிறோம்.

நாக சைதன்யா பேட்டி:

ரசிகர்களுக்கு இன்னும் என்ன விளக்கம் தேவை என்று புரியவில்லை. ரசிகர்களும் ஊடகங்களும் எங்களுடைய முடிவை மதிப்பார்கள் என்று நம்புகிறேன். நாங்கள் எங்கள் வாழ்க்கையில் இருந்து தனி உரிமை கொடுங்கள். ஆனால், எங்களுடைய விவாகரத்துக்கும் என்னுடைய அடுத்த திருமணமும் ஒரு தலைப்பு செய்தியாக மாறி இருக்கிறது. இது ஒரு விஷயமாகவோ, கிசு கிசு ஆகவோ, பொழுதுபோக்காகவோ எல்லோருக்குமே மாறி இருக்கிறது. நானும் சமந்தாவும் விவாகரத்துக்கு பிறகு அழகாக முன்னேறி விட்டோம். ஆனால், ரசிகர்கள் என்னை ‘குற்றவாளி போல’ நடத்துகிறார்கள்.

-விளம்பரம்-

விவாகரத்து காரணம்:

நான் ரொம்ப அழகாக முன்னேறி விட்டேன். நாங்கள் எங்கள் சொந்த வாழ்க்கையை வாழ்கிறோம். எனக்கு மீண்டும் காதல் கிடைத்த.து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். இது என்னுடைய வாழ்க்கையில் மட்டும் நடக்கவில்லை. அதனால் ஏன் என்னை குற்றவாளி போல் நடத்துகிறார்கள்? என்று புரியவில்லை. எங்களுடைய விவாகரத்து, திருமணத்தில் ஈடுபட்ட அனைவரின் நன்மைக்காக இருந்தது. நிறைய யோசித்த பிறகு தான் இந்த முடிவு எடுத்தோம் என்று கூறியிருக்கிறார்.

நாக சைதன்யா- சமந்தா பிரிவு:

இதற்கிடையில் நாக சைதன்யா- நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதன் பின் கடந்த ஆண்டு நடிகர் நாக சைதன்யா- சோபிதா திருமணம் நடந்தது.

Advertisement