விவாகரத்தை அறிவித்த ஓராண்டிற்குள் இரண்டாம் திருமணமா ? இணையத்தில் தீயாக பரவும் செய்தி.

0
404
samantha
- Advertisement -

நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நாகசைதன்யா. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார் நாகசைதன்யா. இவர் 2009ஆம் ஆண்டு வெளிவந்த ஜோஸ் என்ற படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பு மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

-விளம்பரம்-
Actress Samantha And Her Husband Naga Chaitanya Asset Values

இந்த படத்தின் மூலம் தான் நடிகர் நாக சைதன்யாவுக்கும் சமந்தாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். திருமணத்திற்கு பின் இருவரும் வெளிநாடு சுற்றுவது, புகைப்படம், வீடியோ என்று காதல் புறாக்களாக இருந்தார்கள். இதனால் இவர்கள் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்

- Advertisement -

நாக சைதன்யா-சமந்தா பிரிவு:

சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் என பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து கொண்டு இருந்தது. பின் இவர்கள் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. அதோடு இவர்கள் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

சமந்தா நடிக்கும் படங்கள்:

மேலும், இவர்கள் இருவரும் பிரிவிற்கு பிறகு தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் ஊ சொல்லிறியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடலின் மூலம் சமந்தா ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதையும் கவர்ந்தார் என்று சொல்லலாம். பின் இவர் திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம், காத்துவாக்குல 2 காதல், சாகுந்தலம், யசோதா போன்று பல படங்களில் சமந்தா மிரட்டிக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-
samantha

நாக சைதன்யா-சமந்தா வதந்தி:

அதேபோல் நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இருந்தாலும் இவர்கள் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று சோசியல் மீடியாவில் பல வதந்திகள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால், இருவருமே இதை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராக உள்ளார்.

என் வாழ்க்கைக்கு ஒரு காதல் கடிதம்'.. விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யாவின்  இன்ஸ்டா பதிவு! | Naga Chaithanya instagram post - Tamil Filmibeat

நாக சைதன்யா இரண்டாவது திருமணம்:

இந்த முறை நாக சைதன்யா அவர்கள் திருமணம் செய்து கொள்ள போகும் பெண் நடிகை இல்லை என்று டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. கூடிய விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாக சைதன்யா- சமந்தா சேர்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொள்வது உறுதி என்றும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

Advertisement