பல விமர்சங்களை கடந்து இரண்டாம் குழந்தையையும் அதே முறைப்படி பெற்றெடுத்த நகுல் – சுருதி தம்பதி. என்ன முறை தெரியுமா ?

0
629
nakul
- Advertisement -

கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார் நகுல் மனைவி சுருதி. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நகுல். இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் மாசிலாமணி, காதலில் விழுந்தேன், கந்தக்கோட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-96.jpg

அதுமட்டுமில்லாமல் நகுல் பிரபல நடிகை தேவயானியின் உடன் பிறந்த தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவர் பயங்கர குண்டாக இருந்தாராம். நடிப்பிற்காக இவர் தன்னுடைய உடலை பாதியாக குறைத்து நடிக்கத் தொடங்கினார். பின் இவர் பல ஆண்டுகளாக ஸ்ருதி என்பவரை காதலித்து வந்தார். பின் இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

இதையும் பாருங்க : பல ஆண்டு கழித்து மீண்டும் Anchorஆக வந்த நீங்கள் கேட்ட பாடல் விஜயசாரதி – 90ஸ் கிட்ஸ்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி.

- Advertisement -

நகுல் மனைவி சுருதி :

சுருதி தன் கணவர் மற்றும் குழந்தையுடன் சேர்ந்து எடுக்கும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் அவ்வபோது சோசியல் மீடியாவில் அடிக்கடி பகிர்பவர்.இதனால் இவரை சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான பேர் ஃபாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் சுருதி அவர்கள் ஆண், பெண் சமத்துவத்தை குறித்து வீடியோ ஒன்றை போட்டிருந்தார். இதற்கு பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

தண்ணீர் தொட்டியில் பிரசவம் :

அதுமட்டுமில்லாமல் தான் போடும் வீடியோக்களுக்கு எதிர் மறையாக பேசுபவர்களுக்கு சுருதி நேரடியாக பதில் கொடுத்து வந்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இரண்டாம் முறை கர்ப்பமாக இருந்த சுருதிக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க நகுல் மனைவி தனது முதல் மகளை வாட்டர் பர்த் என்ற முறையில் தண்ணீர் தொட்டியில் தனது பிரசவத்தை நடத்தி இருந்தார்.

-விளம்பரம்-

விமர்சனத்திற்கு உள்ளான சுருதி :

நகுல் மனைவி பிரசவத்தை பலரும் விமர்சித்தனர். அதில் குறிப்பாக இணையவாசி ஒருவர், இயற்க்கை முறை வீட்டு பிரசவம் இதனை ஒரு பாமரன் செய்திருந்தால் அரசாங்கமும் ஊடகமும் அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி இருக்கும் என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நகுல் மனைவி சுருதி, sanctum, natural birth center என்ற இடத்தில் தான் குழந்தையை பெற்றெடுத்தேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

மீண்டும் தண்ணீர் தொட்டி பிரசவம் :

ஏற்கனவே தனது பிரசவம் குறித்து குறிப்பிட்டிருந்த நகுல் மனைவி, தகுந்த மருத்துவ ஆலோசனைக்கு பின்னர் தேவையான மருத்துவ உதவியுடன் தான் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் மீண்டும் தன் மகளை பாதுகாப்பாக பெற்றெடுத்தது போலவே தனது மகனையும் வாட்டர் பர்த் முறைப்படியே பெற்றெடுத்துள்ளார்.

Advertisement