அக்கா தேவயானி கூட வரல போல – மனைவியின் வளைகாப்பை நகுல் யாருடன் கொண்டாடியுள்ளார் பாருங்க.

0
4120
nakul
- Advertisement -

அட்அட்றா நாக்க முக்கா நாக்க முக்கா’ என்ற பாடலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகர் நகுல். இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதோடு தன்னுடைய முதல் படத்திலேயே ஒரு பாடலையும் பாடி உள்ளார். அதை விட நடிகர் நகுல் அவர்கள் தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை தேவயானியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இது பலருக்கும் தெரிந்தது தான்.

-விளம்பரம்-

மேலும், நகுல் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல், பின்னணி பாடகரும் ஆவார். இவர் பல படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக விக்ரம் நடிப்பில் வந்த அந்நியன் படத்தில் காதல் யானை என்ற பாடலை இவர் தான் பாடியது. இதனை தொடர்ந்து கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம், கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆகிய படங்களுக்கு பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார்.

- Advertisement -

நடிகர் நகுல் அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகி குழந்தை இல்லாமல் இருந்து வந்த நகுல் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் (ஜூன் 15 ) தனது 35 பிறந்தநாளை முன்னிட்டு தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாகசமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தனது மனைவிக்கு வீட்டில் மிக எளிமையாக வளைகாப்பை நடத்தியுள்ளார் நகுல். மேலும், தனது செல்லப்பிராணியுடன் வளைகாப்பை நடத்தியதாக கூறியுள்ளார் நகுல். இதில் சோகமான விஷயம் என்னவென்றால் நகுலின் அக்காவான தேவையானி கூட இந்த நிகழ்வில் இல்லை. ஊரடங்கு காரணமாக தான் அவரும் வரவில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement