தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நகுல். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நகுல் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வாஸ்கோடகாமா. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.ஜி.கே இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் வம்சி கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், முனிஷ்காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைகளம்:
படத்தில் நிகழ்காலத்தில் இருந்து எதிர்காலத்தில் நடப்பது போல காண்பித்திருக்கிறார்கள். பூமி உருவான போது நல்லவர்கள் மட்டும் தான் வாழ்ந்திருந்தார்கள். அதற்குப் பின்னர் தான் தீயவர்களும் நல்லவர்களும் தனித்தனியாக வாழ்ந்து வந்தார்கள். அதன் பிறகு இருவருமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர். அதற்குப் பின் தீயவர்கள் தான் அதிகமாக வாழ்ந்தார்கள். இதனால் சட்டங்களும், அரசுகளும் கொண்டுவரப்பட்டது.
தீயவர்கள் வாழும் காலத்தில் நல்லவனாக நகுல் வாழ்கிறார். இவர் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன? அதை எப்படி சமாளிக்கிறார்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தின் கதை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் அதை இயக்குனர் கொண்டு சென்ற விதத்தில் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம். கதை எந்த வருடத்தில் நடக்கிறது என்று காண்பித்து இருந்தால் பார்வையாளர்களுக்கு புரிந்திருக்கும். நல்லவர்கள் தான் எதிர்காலத்தில் தவறானவர்கள் என்பதை போல காண்பித்திருப்பது பார்வையாளர்களுக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல் பாதி முழுவதும் வசனங்கள், எதிர்காலத்தில் தீயவர்கள் இருந்தால் மட்டும் வாழ முடியும். அவர்களைக் குறித்து காண்பித்திருக்கிறார்கள். இரண்டாம் பாதி முழுவதுமே சிறையிலேயே நகர்கிறது. கே.ஸ் ரவிக்குமார் வரும் காட்சி மட்டும் நன்றாக இருக்கிறது. எதிர்காலத்தில் தீயவர்கள் மத்தியில் நல்லவர் வாழ்ந்தால் என்ன என்ன பிரச்சனை ஏற்படும் என்பதுதான் இயக்குனர் சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அதை பார்வையாளர்களுக்கு மத்தியில் கொண்டு செல்ல நிறையவே சிரமப்பட்டு இருக்கிறார்.
முதல் பாதி ஓகே என்றாலும் இரண்டாம் பாதியில் நிறைய குறைகள் இருக்கிறது. தேவையற்ற பாடல்கள் உள்ளது. அதுமட்டுமில்லாமல் சில நடிகர்கள் உடைய காட்சிகள் எல்லாம் பில்டப் ஆகவே இருக்கிறது. வித்தியாசமான கதை, நிறைய நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் இயக்குனர் நேர்த்தியாக கொண்டு சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கதையைக் கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் நிறைய கவனம் செலுத்தி இருந்தால் கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கும். ஆனால், படம் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்லணும்.
நிறை:
கதை ஓகே
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்
பின்னணி இசை ஓகே
முதல் பாதி சுமார்

குறை:
கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம்
பாடல்கள் பெரிதாக ஒர்க்கவுட்டாக வில்லை
தேவையில்லாத பில்டப் காட்சிகள்
முதல் பாதி முழுவதுமே வசனம்
இரண்டாம் பாதி சொதப்பல்
நிறைய லாஜிக் குறைபாடுகள்
மொத்தத்தில் வாஸ்கோடகாமா - தோல்வி






