பட வாய்ப்புகள் கூட இல்லாமல் சாப்பாட்டிற்க்கே பரிதவித்த பாக்யராஜ் பட நடிகர் – உதவிய காமெடி நடிகர்.

0
270
Sundaragandam
- Advertisement -

பாக்கியராஜ் பட நடிகருக்கு நடந்திருக்கும் அவல நிலையை அறிந்து நடிகர் சௌந்தர்ராஜா செய்திருக்கும் உதவி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் பாக்யராஜ். இவர் நடிகர் என்பதை தாண்டி பிரபலமான இயக்குனரும் ஆவார். இவர் இயக்கி நடித்தபடங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. அந்த வகையில் பாக்கியராஜ் இயக்கி நடித்திருந்த படம் சுந்தரகாண்டம்.

-விளம்பரம்-

இந்த படம் 1992 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இது முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படம். இந்த படத்தில் பாக்கியராஜ், பானுப்ரியா, சிந்துஜா, கணேஷ்கர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் டேய் சண்முகமணி என்ற டயலாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நந்தகோபால். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் நமசிவாயம். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

சௌந்தர்ராஜா அளித்த பேட்டி:

இருந்தாலும், இவருக்கு சினிமாவில் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது இவர் வறுமை பிடியில் வாழ்ந்து வருகிறார். உண்ண உணவு, இருக்க இடம் இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் இந்த தகவலை அறிந்து நடிகர் சௌந்தர்ராஜா நேரில் சந்தித்து உதவி இருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பது, ஒரு காலத்தில் பல படங்களில் நடித்து நடிகர்கள் இன்று பரிதாபத்தின் நிலையில் இருக்கிறார்கள்.

சௌந்தர்ராஜா செய்த உதவி:

சினிமாவையே கதி என்று நம்பி இருந்த அவர்களுக்கு வாழ்க்கை தற்போது வாழ்வாதாரத்திற்கு கூட வழியில்லாமல் இருக்கிறது. அப்படி இருக்கும் அவர்களுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு அன்பையும், ஆதரவையும் கொடுப்போம். அவர்களுடைய வறுமையையும் போக்குவோம். மேலும், எனக்கு இந்த தகவல் பிளாக் பாண்டியின் மூலம் தான் கிடைத்தது. அதன் பின் தான் நடிகர் நந்தகோபால் நிலைமையை அறிந்து கொண்டேன்.

-விளம்பரம்-

குவியும் வாழ்த்து:

பின் நான் பிளாக் பாண்டி உடன் சென்று பழங்கள், பணம் கொடுத்தும் போது அவருடைய கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அப்போதே அவர் என்ன சொன்னார் தெரியுமா? நான் சீக்கிரமாக குணமடைந்து வந்து சாதிக்க வேண்டும் சொன்னதாக கூறி இருந்தார். இப்படி சௌந்தர்ராஜா செய்திருக்கும் உதவி பார்த்து பலரும் பாராட்டி இருந்தார்கள். தமிழில் பிரபலமான நடிகராக திகழ்பவர் சௌந்தர்ராஜா.

சௌந்தர்ராஜா திரைப்பயணம்:

தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான நடிகர் சசி குமார் நடித்த “சுந்தரபாண்டியன் ” படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர் தான் நடிகர் சௌந்தரராஜன். இவர் வில்லனாக சுந்தரபாண்டியன் படத்தில் விஜய் சேதுபதியின் நண்பராக நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தமிழ்நாடு பாரத் சினி அவார்ட்ஸ் சார்பில்,சிறந்த அறிமுக

Advertisement