விஜய் டிவியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் நாஞ்சில் விஜயன். இவர் மீது திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் திருநங்கை வைஷு, கடந்த ஏழு வருடங்களாக நாஞ்சில் விஜயன் என்னுடன் தான் தொடர்பில் இருந்தார். ஆனால், கொஞ்ச நாட்களாக அவர் என்னுடன் பழகுவதை நிறுத்தி கொண்டார். நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். ஐந்து ஆண்டுகளாக நாங்கள் இருவரும் நெருங்கி பழகினோம். ஒரு பெண்ணாக இருந்திருந்தால் நான் கர்ப்பமாகி இருப்பேன். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் சொல்லி என்னிடம் பாலியல் ரீதியாக நாஞ்சில் விஜயன் தொடர்பு கொண்டார். மனைவியாகவும் நான் வாழ்ந்திருக்கிறேன்.

இப்போது நான் திருநங்கை என்பதால் தவிர்த்து விட்டார். இந்த சமூகம் என்னை எப்படி எடுத்துக் கொள்ளும் என்று நாஞ்சில் விஜயன் கேட்கிறார். நான் திருநங்கை என்பது நாங்கள் பழகும் போது அவருக்கு தெரியாதா?
இதைப் பற்றி தொடர்பு கொண்டு அவரிடம் பேசலாம் என நினைத்தாலும் அவர் என்னை தவிர்க்கிறார். எல்லா சோசியல் மீடியாக்களிலும் என்னை பிளாக் செய்துவிட்டார். அவருக்கு குழந்தை வேண்டும் என்று சொன்னதால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள சரி என்றேன் என்று நாஞ்சில் விஜயனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காண்பித்து இருந்தார்.
நாஞ்சில் விஜயன் சர்ச்சை:
இப்படி இருக்கும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாஞ்சில் விஜயன் விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், வாழ்க்கையில் நல்ல பேர் வாங்குவது ரொம்ப பெரிய விஷயம். என்னுடைய கடின உழைப்பால் மட்டும் தான் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். என்னுடன் நீங்கள் ஏழு வருடங்களாக வாழ்ந்ததாக சொன்னீர்கள். அப்படி நான் உங்களுடன் இருந்திருந்தால் உங்கள் வீட்டு உரிமையாளரிடம் கேட்போம். அவருக்கு தெரியாமல் இருக்காது. நான் உங்களை காதலித்ததாக சொன்னீர்கள். மனசாட்சி இல்லாமல் பேசுகிறீர்கள். நான் உங்களிடம் சகோதரியாகத்தான் பார்த்து பழகினேன். என்னை காதலிப்பதாக நீங்கள் சொன்னீர்கள்.
https://www.youtube.com/watch?v=AjuKeguCNUk
நாஞ்சில் விஜயன் வீடியோ:
நான், எனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டேன். இருந்தும் விடாமல் நீங்கள் தான் என்னை தொந்தரவு செய்தீர்கள். எனக்கு திருமணம் ஆன பிறகு கூட போன் செய்து டார்ச்சர் செய்தீர்கள். அதனால்தான் நான் வைஷுவை பிளாக் செய்து விட்டேன். நான் தான் குழந்தைக்காக மரியாவை திருமணம் செய்து வைத்தேன் என்று வைஷு சொல்வதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்பட்டமான பொய். அதோடு நான் அவரிடம் மூன்று லட்சம் ரூபாய் பணம் வாங்கினேன் என்று சொல்லி இருக்கிறார். நான் பணம் வாங்கியதற்கான ஆதாரம் உங்களிடம் இருந்தால் கொடுங்கள்.
https://www.youtube.com/watch?v=R3CRDzZXO1k
நாஞ்சில் விஜயன் கொடுத்த விளக்கம்:
நீங்கள் செய்த வேலை ரொம்ப அசிங்கமாக உள்ளது. எதற்காக இப்படி நீங்கள் செய்கிறீர்கள். திருநங்கை என்பதால் மட்டும் நான் உங்களை ஒதுக்கவில்லை. எனக்கு நிறைய திருநங்கை நண்பர்கள் இருக்கிறார்கள். என் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி இருக்கிறீர்கள். அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. எனக்கு உங்கள் மீது நிறைய மரியாதை இருக்கிறது. உங்கள் பயணத்தை நீங்கள் தொடருங்கள். எனக்கு குடும்பம், குழந்தை இருக்கின்றது. ஒரு வேலை நான் உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.






