விஜயை விமர்சித்து நடிகர் நெப்போலியன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

மேலும், நெப்போலியன் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார்.
பின் தன் மகனுக்காக நெப்போலியன் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார். தற்போது இவர் சொந்தமாக ஐடி கம்பெனி நடத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யை விமர்சித்து நடிகர் நெப்போலியன் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நெப்போலியன் பேட்டி:
அதில் நெப்போலியன், நடிகர்களுக்கு கூட்டம் வரத்தான் செய்யும். ரஜினி, கமல், விஜயகாந்த்க்கு வராத கூட்டமா? எனக்குமே அந்த காலத்தில் நிறைய கூட்டம் வந்தது. அப்போதெல்லாம் சோசியல் மீடியாக்கள் கிடையாது. அதனால்தான் அதை படம் பிடித்து காட்ட முடியவில்லை. நடிகர்களுக்கு கூட்டம் வரத்தான் செய்யும். இவ்வளவு சம்பளத்தையும் விட்டுட்டு வரேன்னு சொல்றீங்க. மக்களுக்கு சேவை செய்ய வரேன்னு சொல்றீங்க. அப்போ மக்களோடவே போய் இருங்க. கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரைக்கும் நடை பயணம் வாங்க. எவ்வளவு பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாம் அப்படி நடந்து வந்திருக்கிறார்கள்.

விஜய் பற்றி சொன்னது:
தன்னை பார்க்க வரும் கூட்டத்தை கண்ட்ரோல் பண்ண அவர்களிடமே ஆளில்லை. அவர்கள் எதுக்கெடுத்தாலும் அரசாங்கத்தை நம்பிக்கொண்டு இருக்கக் கூடாது. இது அவர்களோட கூட்டம், அவங்க தான் பாத்துக்கணும். அரசியல் வேறொரு களம். அது சினிமா கிடையாது. சினிமாவுல பன்ச் டைலாக் பேசற மாதிரி அரசியல்ல பேசக்கூடாது. CM பதவிக்கு ஆசப்படுற நீங்க CMஅ கிண்டல் அடிக்கிறீங்க. முதல்ல அந்த பதவிக்கான தகுதிய வளர்த்துக்கோங்க. அவர் சினிமாவுல கூட யார்கிட்டயும் இறங்கி பழக மாட்டார். உங்கள கண்ணு முன்னாடியே உங்கள பாக்க வந்த அவ்ளோ மக்கள் மூச்சி முட்டி நின்னு இருக்காங்க.
https://youtu.be/syTYqjqKSCY?si=Mzn6ap9k2J6RaVOd
விஜய் குணம்:
உயிருக்கு போராடி இருக்கிறத பாத்து வண்டில இருந்து குதிச்சி போய் என்ன பண்ணனுமோ பண்ணி இருக்கணும். அத விட்டுட்டு தனக்கு எதாவது ஆபத்து ஆகிடும்னு பயப்படுறீங்க. அவர் என்ன சாதிச்சிடார்னு Y பிரிவு பாதுகாப்பு, உங்களுக்கு எதுக்கு தனி விமானம். விஜய் உடைய சுபாவமே சினிமா துறையில் எல்லோருக்குமே தெரியும். அவர் யாருடனும் நெருங்கி பழக மாட்டார். எனக்கும் அவருக்குமே நிறைய மனக்கசப்புகள் இருக்கு. 18 வருடத்திற்கு முன்னாடி அது நடந்தது. அதற்கு பிறகு அவருடைய படங்களை நான் பார்ப்பதே கிடையாது. அவரைப் பற்றி பேசுவதுமே இல்லை. ஒரு நடிகன் அரசியலுக்கு வரும்போது சிலவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார்






